கோவையில் நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தினால் மனமுடைந்த ராஜஸ்தான் மாநில தொழிலாளி ஒருவர் தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் கணபத்தாஸ். 20 வயதான இவர், கோவை அய்யண்ண கவுடர் வீதியில் வசித்து வந்தார். கணபத் தாஸ் வெரைட்டி ஹால் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.இந்நிலையில் நேற்று மதியம் கணபத் தாஸ் அறைக்கு உணவருந்த வந்துள்ளார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவரது அறையின் கதவு திறக்கப்படவில்லை.
இதனால் அங்கு சென்ற சக ஊழியர்கள் பார்த்த போது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. கதவை உடைத்து பார்த்த போது கணபத் தாஸ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து வெரைட்டி ஹால் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் வந்த காவல் துறையினர், கணபத் தாசின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த தற்கொலை தொடர்பாக வெரைட்டி ஹால் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணபத் தாஸ் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் தீவிர ரசிகர் எனவும், சுஷாந்த் சிங்கின் தற்கொலை காரணமாக மனமுடைந்து காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது. “நான் சுஷாந்த் சிங் பாய் கிட்ட போறேன்” என்று இந்தியில் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துள்ள நிலையில், அதனை கைப்பற்றி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Thanks to: news 18
Rathiri Rounds Never Stop