புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் அரசு பஸ்கள் ஓடத்தயார் நிலையில் உள்ளன. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. புதுக்கோட்டை, கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் இந்த மாதம் (செப்டம்பர்) 30-ந் தேதி வரை ஊரடங்கு தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் பஸ்கள் ஓடும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்திற்குள் அரசு பஸ்களை இயக்க போக்குவரத்து கழக …
Read More »கொரோனா தொற்றுக்குள்ளான சிறுவன் தப்பி ஒட்டம் !! -புதுக்கோட்டை..
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான 17 வயது சிறுவன் மருத்துவமனைக்கு செல்லாமல் தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான 17 வயது சிறுவன் மருத்துவமனைக்கு செல்லாமல் தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நோய் பரப்பும் விதமாக சிறுவன் சுற்றி திரிவதாகவும் , அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இலுப்பூர் காவல் நிலையத்தில் இலுப்பூர் பேரூராட்சி செயல் …
Read More »50 பவுன் நகைகள் மாயம்? -புதுக்கோட்டை மாவட்டம் ..
புதுக்கோட்டை அருகே ஓய்வுபெற்ற அரசு பெண் அதிகாரி வீட்டில் 50 பவுன் நகை மாயமானது. மேலும் அடுத்தடுத்த வீடுகளிலும் மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். புதுக்கோட்டை, புதுக்கோட்டை கட்டியவயல் அருகே பாரதிநகரை சேர்ந்தவர் முத்து (வயது 45). இவர் கடந்த 20-ந் தேதி தனது தம்பியின் மகள் நிச்சயதார்த்த விழாவிற்கு சென்று விட்டு மறுநாள் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. மேலும் வீட்டின் …
Read More »ஆக்கிரமிப்பாளர்களுக்குத் துணைபோகும் அதிகாரிகள்! -புதுக்கோட்டை மாவட்டம் ..
`அரசின் சட்டங்களையும் ஆணைகளையும் துஷ்பிரயோகம் செய்துவரும் அரசு அலுவலர்களைக் கண்டித்து அவர்களின் செயல்களை மக்கள் அறியும் வண்ணம் 07.09.2020 முதல் ஆலங்குடி சரகப் பகுதிகளில் சுவரொட்டி ஒட்டுவதற்குப் பாதுகாப்பும், அனுமதியும், நோட்டீஸ் ஒட்ட பசையும் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.’ புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே குளந்திரான்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் எழுத்தாளர் துரை குணா. சமூக ஆர்வலரான இவர், கடந்த 17.02.2020-ல் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்புக் கோட்டப் பொறியாளர் உட்பட அரசு …
Read More »விநாயகர் சிலை அகற்றம் ; புதுக்கோட்டை மாவட்டம் ..
புதுக்கோட்டையில் தடையை மீறி வைக்கப்பட்ட விநாயகர் சிலை அகற்றப்பட்டது. புதுக்கோட்டை, இன்று(சனிக்கிழமை) விநாயகர் சதுர்த்தி ஆகும். வழக்கமாக பொது இடங்களில் போலீசார் அனுமதியுடன் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். பின்னர், மாவட்ட நிர்வாகம் அறிவிக்கும் தேதியில் அந்த விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கவும், ஊர்வலமாக …
Read More »சொகுசுக் காரில் தொடரும் ஆடு திருட்டு! – புதுக்கோட்டை..
கொரோனா நேரத்தில் வேலையில்லாதவர்கள் பலரும் ஆடு திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், ஆடு வளர்ப்போர் கலக்கடைந்திருக்கின்றனர். புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி, கறம்பக்குடி சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் ஆடுகள் திருடுபோகும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. சொகுசு கார்களில் ஆடுகள் திருடப்படும் சம்பவம் ஆடு வளர்ப்பவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிவேல் (55). விவசாயியான இவர் கடன் வாங்கி 25-க்கும் மேற்பட்ட ஆடுகளை வாங்கி வளர்த்து …
Read More »சிகிச்சைக்கு வர மறுத்த நோயாளிகள் !!-புதுக்கோட்டை மாவட்டம் ..
ஆம்புலன்ஸோடு, பல முறை சுகாதாரப்பணியாளர்கள் வீட்டிற்குச் சென்றும் அவர்களைச் சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல முடியாத நிலை. காவல்துறையினர், வருவாய்த்துறை என பல்வேறு தரப்பினரும் பேசி சமாதானம் செய்து ஒரு நாளைக்குப் பிறகு தற்போது சிகிச்சைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். உலகம் முழுவதும் கடும் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ள கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், தொற்று பரவலின் எண்ணிக்கை நாளுக்கு நாள் …
Read More »மது விற்ற 11 பேர் கைது 1,000 மது பாட்டில்கள் பறிமுதல் ; புதுக்கோட்டை மாவட்டம் ..
புதுக்கோட்டை மாவட்டத்தில் மது விற்ற 11 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1,000 மது பாட்டில்கள் மற்றும் ரூ.17 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டன. புதுக்கோட்டை, சுதந்திர தின விழாவையொட்டி நேற்று முன்தினமும், முழு ஊரடங்கையொட்டி நேற்றும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தன. இந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மதுப்பாட்டில்களை மொத்தமாக வாங்கி வைத்து சட்டவிரோதமாக விற்கும் நபர்களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின்பேரில் …
Read More »பல்பொருள் அங்காடி நிறுவனம் மீது மோசடி புகார் !!- புதுக்கோட்டை..
பல்பொருள் அங்காடி நிறுவனம் மீது மோசடி புகார் அளிக்க மளிகை பொருட்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டை, கொரோனா ஊரடங்கின் காரணமாக புதுக்கோட்டையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று மனுக்கள் அளிக்க பொதுமக்கள் பலர் வந்தனர். தஞ்சாவூரை சேர்ந்த ராமதாஸ் தலைமையில் பொதுமக்கள் சிலர் கையில் மளிகைபொருட்களுடன் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்திற்கு புகார் மனு கொடுக்க வந்திருந்தனர். அவர்களை …
Read More »முன்விரோதத்தில் முதியவர் அடித்துக்கொலை !!- புதுக்கோட்டை ..
புதுக்கோட்டை அருகே உள்ளாட்சி தேர்தல் முன்விரோதத்தில் முதியவர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர். அன்னவாசல், புதுக்கோட்டை அருகே வாகவாசலை சேர்ந்தவர் கலைவாணன் (வயது 60). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சுப்ரமணியன் என்பவருக்கும் இடையே உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. அதாவதுசுப்ரமணியன் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட போது, விரோதம் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.’ இந்த நிலையில் …
Read More »
Rathiri Rounds Never Stop