புதுக்கோட்டையில் முககவசம் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் சென்றவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. அப்போது சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை, கொரோனா எனும் கொடிய வைரசின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும், கைகளை கிருமி நாசினி கொண்டு கழுவுதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் இவை மூன்றும் அவசியம் என மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன. மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாதவர்களுக்கு …
Read More »கஞ்சா கும்பலை பிடிக்க தவறிய திருமயம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் !! – புதுக்கோட்டை ..
கஞ்சா கும்பலை பிடிக்க தவறிய திருமயம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை பணியிடை நீக்கம் செய்து திருச்சி சரக டி.ஐ.ஜி. ஆனிவிஜயா உத்தரவிட்டுள்ளார். புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து கடத்திவரப்பட்ட கஞ்சா புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட மணவாளன்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து வேறுபகுதிக்கு கடத்தி செல்லமுயன்றபோது புதுக்கோட்டை மாவட்டம், வெள்ளனூர் போலீசார், சிப்காட் பகுதியில் வைத்து கடத்தல் கும்பலை மடக்கி பிடித்தனர். மேலும் அவர்களிடம் …
Read More »புதுக்கோட்டையில் பெரியார் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு !!
திருச்சி சம்பவம் எதிரொலியாக புதுக்கோட்டையில் பெரியார் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டன. புதுக்கோட்டை, திருச்சி அருகே இனாம்குளத்தூரில் சமத்துவபுரத்தில் பெரியார் சிலை மீது காவி சாயம் பூசப்பட்டதால் நேற்று பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெரியார் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் திருச்சியில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரியார் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு நேற்று போடப்பட்டன. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு …
Read More »மூதாட்டிகளைக் கட்டிவைத்து நகை, பணம் திருட்டு! – புதுக்கோட்டை..
மூதாட்டிகள் தனியாக இருப்பதை நோட்டமிட்ட 3 பெண்கள், மூதாட்டிகளைத் தூணில் கட்டிப்போட்டு, வாயைத் துணியால் அடைத்து கழுத்தில் அணிந்திருந்த 4 சவரன் தங்க நகை, மற்றும் ரொக்கப்பணத்தையும் திருடினர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே விராச்சிலையைச் சேர்ந்தவர் அம்பாள்(90). இவரது மகள் உமையாள்(70). தாய், மகளான இருவரும் விராச்சிலை பழைய ஆரம்பச் சுகாதார நிலையம் அருகே உள்ள தங்களது வீட்டில் தனியாக வசித்து வந்தனர். இந்தநிலையில், முதியவர்களான இருவரும் ஆண் …
Read More »உதவிய இளைஞர்கள்! வீட்டுக்கு அனுப்பிய அரசு மருத்துவமனை; புதுக்கோட்டை மாவட்டம் ..
“இன்னும் ரெண்டு மூணு நாள் போயிருந்தால், கால எடுக்க வேண்டிய சூழல் வந்திருக்கும்னு சொன்னாங்க. சரியான நேரத்தில் கூட்டிக்கிட்டுப் போய் பையனை பொழைக்க வச்சு, அந்தக் குடும்பத்தையே வாழ வச்சிட்டோம்னு நெனைக்கும்போது மனசுக்கு ரொம்ப திருப்தியாக இருக்கு.” புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே தச்சன்குறிச்சி சவேரியார்பட்டியைச் சேர்ந்தவர் பெரியண்ணன். பெரியண்ணன் – வாசுகி தம்பதிக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள். கூலி வேலை செய்து தான் பெரியண்ணன் குடும்பத்தைக் காப்பாற்றி …
Read More »பொதுமக்கள் மறியல் போராட்டம் ; புதுக்கோட்டை மாவட்டம் ..
வேலை வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதாக கூறியும், அனைவருக்கும் வேலை வழங்கக்கோரியும் திருமயம் அருகே பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருமயம், புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள குளிபிறை ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் 400-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் பிரிவை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஊராட்சி மூலம் வழங்கப்படும் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணி வழங்காமல் பாரபட்சம் காட்டப்படுவதாக கூறப்படுகிறது. அதேபோல, முறையாக குடிநீரும் வழங்கப்படுவதில்லையாம். …
Read More »சி.ஐ.டி.யூ.வினர் ஆர்ப்பாட்டம் ; புதுக்கோட்டை மாவட்டம் ..
புதுக்கோட்டை மாவட்ட சி.ஐ.டி.யூ.வின் உள்ளாட்சி துறை தொழிலாளர் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை, புதுக்கோட்டை மாவட்ட சி.ஐ.டி.யூ.வின் உள்ளாட்சி துறை தொழிலாளர் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முகமது அலி ஜின்னா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஸ்ரீதர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் பணிபுரியும் தினக்கூலி, ஒப்பந்த சுய …
Read More »பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை ; புதுக்கோட்டை மாவட்டம் ..
சிறுவன்-சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது. புதுக்கோட்டை, புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரை சேர்ந்தவர் ரெங்கசாமி மகன் ரகுபதி (வயது 23). இவர், புதுக்கோட்டையில் கேபிள் டி.வி. நடத்தும் ஒருவரிடம் வேலை பார்த்தார். இந்நிலையில் கடந்த 2019 ஆண்டு மார்ச் மாதம் 16-ந்தேதி புதுக்கோட்டை திலகர் திடலில் உள்ள ஒரு வீட்டில் கேபிள் டி.வி.யில் ஏற்பட்ட பழுதை …
Read More »பிரதமரின் நிதி உதவி திட்டத்தில் முறைகேடு – புதுக்கோட்டை மாவட்டம் ..
புதுக்கோட்டையில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் பிரதமரின் நிதி உதவி திட்டத்தில் முறைகேடு தொடர்பாக நடவடிக்கை கோரி கலெக்டரிடம் பா.ஜ.க.வினர் மனு கொடுத்தனர். புதுக்கோட்டை, பிரதமரின் நிதி உதவி திட்டத்தில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு தலா ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. ரூ.2 ஆயிரம் வீதம் 3 தவணைகளாக வழங்கப்படும் இத்திட்டத்தில் தமிழகத்தில் ஆங்காங்கே முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்துவருகின்றனர். இந்த நிலையில் இத்திட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் …
Read More »நீட் தேர்வுக்கான ஹால்டிக்கெட் வராததால் மாணவி தற்கொலை !!!
புதுக்கோட்டை மாவட்டத்தில் நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வரவில்லை என மாணவி தற்கொலை செய்துகொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆலங்குடி அருகே உள்ள டி-களபம் கிராமத்தை சேர்ந்த விவசாயி கணேசன் என்பவரின் மகள் ஹரிஷ்மா, 12-ம் வகுப்பு முடிந்துள்ளார். மருத்துவம் படிக்க நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த நிலையில், அவருடன் படித்த சக மாணவிகளுக்கு மட்டும் ஹால் டிக்கெட் வந்துள்ளது. தனக்கு ஹால் டிக்கெட் வராததால், மனமுடைந்த மாணவி கடந்த ஞாயிற்றுக்கிழமை விஷம் …
Read More »
Rathiri Rounds Never Stop