Breaking News
Home / குறுகிய செய்திகள் / இறந்தவரின் உடலை தூக்கி வீசும் சுகாதாரத்துறை!!

இறந்தவரின் உடலை தூக்கி வீசும் சுகாதாரத்துறை!!

புதுச்சேரியில் கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை குழியில் அப்படியே வீசி விட்டு செல்லும் அதிகாரிகளின் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியைச் சேர்ந்த 44 வயதான அந்த நபர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி புதுச்சேரி கோபாலன் கடை பகுதியை சேர்ந்தவர். இவர்களது மூத்த மகன் உடல் நலக்குறைவால் சில மாதங்களுக்கு முன் இறந்துவிட்டார். இதனால் இளைய மகனுடன் அவரது மனைவி புதுச்சேரி வந்துள்ளார்.

இந்நிலையில் மனைவி மற்றும் மகனை பார்க்க வந்தவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மரணம் நிகழ்ந்தது. அவரது ரத்தத்தை சோதித்ததில் கொரோனா இருப்பது உறுதியானது. இதனால் அவரது உடலை உறவினர்கள் வாங்க முன்வராததால் அவரது உடல் கோபாலன் கடை சுடுகாட்டில் 15 அடி ஆழம் பள்ளம் தோண்டி கிருமிநாசினி தெளித்து புதைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பான வீடியோ ஒன்று தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், சடலத்தை ஆம்புலன்சில் இருந்து இறக்கிய அதிகாரிகள், உடலை அப்படியே குழிக்குள் குப்பையை கொட்டுவதை போல தூக்கி வீசுகின்றனர்..

 

Thanks To: Samayam

About Admin

Check Also

கோவை மாவட்டத்தை திமுக புறக்கணிக்கிறதா? மாஜி அமைச்சர் வேலுமணி

கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கூறியதாவது:கோவைக்கு வந்த ஸ்டாலின் சாலைகளை சீரமைக்க உத்தரவிடுவார் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster