Breaking News
Home / இந்தியா / சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட விஷ்ணு ஆலயத்தை பாதுகாக்கக் கோரிய வழக்கு..

சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட விஷ்ணு ஆலயத்தை பாதுகாக்கக் கோரிய வழக்கு..

சென்னை: சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட விஷ்ணு ஆலயத்திற்கு உரிய பாதுகாக்க வழங்கக் கோரிய வழக்கு இந்த சமய அறநிலையத்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை சேர்ந்த ஶ்ரீதரன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், நாகை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்காவில் உள்ள அருள்மிகு நான்மடிகை பெருமாள் கோவில் சோழ மன்னர்களான கேசரி வர்மா, ராஜராஜசோழன், ராஜேந்திர சோழன் ஆகியோர் ஆட்சி காலத்தில் புகழ் பெற்ற திருத்தலமாக விளங்கியது.

தமிழ்ப் புலவர்களால் முதல் சங்கம் பூம்புகார் அருகில் உள்ள இங்கே நடைபெற்றதாக நம்பப்படுகிறது. 108 விஷ்ணு திவ்ய தேசங்களில் ஒன்றான இக்கோவிலை இந்து சமய அறநிலையத்துறை தற்போது பராமரித்து வருகிறது. சிறப்புமிக்க இந்த ஆலத்தின் கோசாலாவிற்கு மாடுகள் தானமாக வழங்கப்பட்டு வந்த நிலையில் உரிய பாதுகாப்பு இல்லாத காரணத்தால், எவரும் தானம் செய்ய முன்வருவதில்லை. பல்வேறு சமயங்களில் சிலைகள் திருப்பட்டதாக கூறப்படும் நிலையில் ஆலயம் உரிய பாதுகாப்பு இல்லாமல் சிதிலமடைந்து காணப்படுகிறது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு சுமார் 4,000 ஒய்வு பெற்ற ராணுவ வீரர்கள் மற்றும் காவலர்களை பணியில் ஈடுபடுத்தியிருப்பதாக கடந்த 2009 ம் ஆண்டு அறிவித்தது.

Thanks To: One India Tamil

About Admin

Check Also

வறுமை பட்டியல் வெளியீடு: பீஹார் மாநிலம் முதலிடம்

புதுடில்லி :’பீஹார், ஜார்க்கண்ட், உத்தர பிரதேசம் ஆகியவை நாட்டின் மிக ஏழ்மையான மாநிலங்கள்’ என, நிடி ஆயோக் அறிக்கை வெளியிட்டுள்ளது. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster