
தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்குகிறது.
அதற்கான மையங்களின் எண்ணிக்கை 202 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முன்னதாக 67 விடைத்தாள் திருத்தும் மையங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில், கொரோனா தொற்று அதிகரித்து வருவதன் காரணத்தால், சென்னை நீங்கலாக மாநிலம் முழுவதும் விடைத்தாள் திருத்தும் மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் தனிமனித இடைவெளியை கடைபிடித்து விடைத்தாள்களை திருத்தவும், மையங்களில் நெருக்கடியான சூழலை தவிர்க்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கட்டுப்படுத்தப் பட்ட பகுதிகளில் இருந்து ஆசிரியர்கள் வரக்கூடாது என ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில், விடைத்தாள் திருத்துபவர்கள் முகக்கவசம் மற்றும் கிருமிநாசினிகளை பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Source :News 18
Rathiri Rounds Never Stop