Breaking News
Home / இந்தியா / போலி இ.பாஸ் – இரண்டு ஆம்னி பஸ்களை போலீஸார் பறிமுதல்

போலி இ.பாஸ் – இரண்டு ஆம்னி பஸ்களை போலீஸார் பறிமுதல்

போலி இ.பாஸ் அச்சடித்து, மகாராஷ்ட்ரா மாநிலம் தாராவியில் இருந்து தேனிக்குப் பயணிகளை ஏற்றிவந்த இரண்டு ஆம்னி பஸ்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். நால்வர் கைது செய்யப்பட்டனர்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி கணவாய் சோதனைச்சாவடியில் நேற்று இரவு வாகன சோதனையில் போலீஸார் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மதுரையில் இருந்து இரண்டு ஆம்னி பஸ்கள், தேனி நோக்கி வந்துகொண்டிருந்தது.

பஸ்ஸை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது மகாராஷ்ட்ரா மாநிலம், தாராவியில் இருந்து பயணிகளை ஏற்றி வருவதாகவும், இதற்கு தமிழ்நாடு அரசின் இ.பாஸ் வைத்துள்ளதாகவும் டிரைவர்கள் கூறியுள்ளனர்.

அதனை அடுத்து, அவர்களிடம் இருந்த இ.பாஸை போலீஸார், அதனை சோதனை செய்தனர். அப்போது அந்த பாஸ் போலியானது எனத் தெரியவந்தது. அதனையடுத்து பேருந்தை பறிமுதல் செய்து ஆண்டிபட்டி காவல் நிலையத்திற்கு கொண்டுவந்தனர். தொடர்ந்து, பேருந்து உரிமையாளர், டிரைவர்கள் என நால்வர் கைது செய்யப்பட்டனர்.

 

(Tamil the Hindu)

About Admin

Check Also

அரசியல் சாசனப்படி குடிமக்களின் உரிமைகளை காக்கவேண்டும் : மோடி

புதுடில்லி:அரசியல் சாசனப்படி குடிமக்களின் உரிமைகளை காக்கவேண்டும் என அரசியல் சாசன நாள் விழாவில் பிரதமர் மோடி கூறினார்.     …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster