Breaking News
Home / தமிழகம் / மதவழிபாட்டுதளங்கள் திறப்புக்கு தடை

மதவழிபாட்டுதளங்கள் திறப்புக்கு தடை

வழிபாட்டுத் தலங்களை திறந்தால் அதிகளவில் வரும்
பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது – தமிழக அரசு.

தமிழகத்தில் மத வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில்,

சிறு, குறு தொழில் நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள், பழுது பார்க்கும் சேவைகள் உள்ளிட்ட பணிகளை சில கட்டுப்பாடுகளுடன் செயல்பட தமிழக அரசு அனுமதி வழங்கியது. ஆனால் பள்ளிகள், கல்லூரிகள், மத வழிபாட்டுத்தலங்கள் செயல்படுவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.

இந்நிலையில், சமூக விலகல் உள்ளிட்ட கட்டுப்பாடுகளுடன், கோவில், மசூதி மற்றும் தேவாலயங்களை திறக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி, சென்னை திருமங்கலத்தை சேர்ந்த ஆர்.கே.ஜலில் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சத்தியநாராயணன் மற்றும் அனிதா சுமந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ராஜகோபால், மத வழிபாட்டுத் தலங்களை திறந்தால் அதிகளவில் வரும் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது என்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என தெரிவித்தார். மேலும், தற்போது மத வழிப்பாட்டு தலங்களுக்கு பாதுகாப்பு அளிக்க போதுமான காவலர்கள் இல்லை என்றும் மத வழிபாட்டு தலங்களை திறக்கக்கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதையும் சுட்டிக்காட்டினார்.

இதையடுத்து நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

 

Thanks : News 18 Tamil

About Admin

Check Also

கோவை மாவட்டத்தை திமுக புறக்கணிக்கிறதா? மாஜி அமைச்சர் வேலுமணி

கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கூறியதாவது:கோவைக்கு வந்த ஸ்டாலின் சாலைகளை சீரமைக்க உத்தரவிடுவார் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster