Breaking News
Home / வட மாவட்டங்கள் / சென்னை / சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் பட்டியல் வெளியீடு..!

சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் பட்டியல் வெளியீடு..!

கொரோனா தொற்றால் பாதித்தவர்கள் இருக்கும் பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக  அறிவிக்கப்படும். இந்தப் பகுதிகளுக்கு ஊரடங்கு காலத்தில் அரசு அறிவித்துள்ள தளர்வுகளும் எதுவும் பொருந்தாது.வெளி நபர்கள் யாரும் இந்தப் பகுதிகளுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்களும் வெளியே செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

இந்த நிலையில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் புதிய பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. முன்னதாக 419 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக இருந்தது. நாளுக்கு நாள் சென்னையில் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், தற்போது புதிதாக வெளியிட்டுள்ள பட்டியலில் இந்த எண்ணிக்கை 445 ஆக உயர்ந்துள்ளது.


சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக, ராயபுரம் – 90, திரு.வி.க.நகர் – 79, வளசரவாக்கம் – 45, தண்டையார்பேட்டை- 42, தேனாம்பேட்டை- 39,  அம்பத்தூர் 30, திருவொற்றியூர் – 24, கோடம்பாக்கம் – 22  பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளன.
அதேபோல், மாதவரம் – 16, அடையாறு- 13,  அண்ணாநகர் -13, மணலி – 9, பெருங்குடி- 9, சோழிங்கநல்லூர் – 8, ஆலந்தூர் – 6 பகுதிகள் என மொத்தம் 445 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன.

இதை தவிர்த்து ராயபுரத்தில் காசி செட்டி தெரு மற்றும் மறைக்காயர் தெரு என இரண்டு 2 பகுதிகளில் கடந்த 28 நாட்களாக தொற்று இல்லாததால் அப்பகுதிகள் தற்போது கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

 

Thanks News 18

About Admin

Check Also

கோவை மாவட்டத்தை திமுக புறக்கணிக்கிறதா? மாஜி அமைச்சர் வேலுமணி

கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கூறியதாவது:கோவைக்கு வந்த ஸ்டாலின் சாலைகளை சீரமைக்க உத்தரவிடுவார் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster