சென்னை;
சென்னை மாநகராட்சியில் பதிவு செய்யப்பட்ட தெருவோர வியாபாரிகளுக்கு ரூ.1000 -நிவாரணத் தொகையை வழங்க தங்களின் வங்கி கணக்கு தொடர்பான விவரங்களை உடனடியாக மாநகராட்சியிடம் வழங்குமாறு கமிஷனர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார். முதலமைச்சர், சென்னை மாநகராட்சியில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட தெருவோர வியாபாரிகளுக்கு ரூ.1000 – நிவாரணத் தொகையை வழங்க உத்தரவிட்டுள்ளார்.
சென்னை மாநகராட்சியில் பதிவு செய்யப்பட்ட 27,195 தெருவோர வியாபாரிகள் உள்ளனர். எனவே, இதுவரை வங்கி கணக்கு விவரங்களை வழங்காத பதிவு செய்யப்பட்ட தெருவோர வியாபாரிகள் தங்கள் வங்கியின் பெயர் மற்றும் கிளை முகவரி, சேமிப்பு கணக்கு எண், கிளை குறியீட்டு எண், IFSC குறியீட்டு எண் மற்றும் சென்னை மாநகராட்சியால் வழங்கப்பட்ட தெருவோர வியாபாரிகளுக்கான அடையாள அட்டை எண் (ஸ்கேன் செய்யப்பட்ட நகல்), வியாபாரியின் கைபேசி எண் ஆகியவற்றிற்கான நகல்களை உடனடியாக கீழ்க்காணும் ஏதேனும் ஒரு வழிமுறையில் தகவல்களை வழங்கும்பட்சத்தில் நிவாரண தொகை உடனடியாக உங்கள் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
சம்பந்தப்பட்ட மண்டல நகர விற்பனைக் குழு, மண்டல அலுவலகம் (அல்லது) arohqprop1@gmail.com இமெயில் முகவரி மூலமாக (அல்லது) கைப்பேசி எண்.94999 32899 வாட்ஸ்ஆப் மூலமாக (அல்லது) www.chennaicorporation.gov.in இணையதள முகவரி மூலமாக தகவல்களை வழங்கலாம்.
மேலும், சம்பந்தப்பட்ட மண்டல நகர விற்பனைக்குழு அலுவலகத்தில் விவரங்களை வழங்க மண்டல அலுவலகத்திற்கு வரும்போது கொரோனா வைரஸ் நோய் தடுப்புக்கான முன்னெச்சரிக்கை வழிமுறைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என கமிஷனர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
Rathiri Rounds Never Stop