Breaking News
Home / உலக செய்திகள் / இந்தியாவில் கொரோனா பாதிப்பு – 7447 ; குணமடைந்தோர் எண்ணிக்கை – 645

இந்தியாவில் கொரோனா பாதிப்பு – 7447 ; குணமடைந்தோர் எண்ணிக்கை – 645

புதுடெல்லி, ஏப். 11

இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 7447 ஆக உள்ளது.

இந்தியாவில் சமூக தொற்று ஏற்படுவதை தவிர்க்க ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்தல் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஏப்ரல் 14ம் தேதிக்கு பிறகும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படலாம் என தெரிகிறது. இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 7447 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1035 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

40 பேர் மரணம் அடைந்துள்ளனர். கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 239 ஆகியுள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 645 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் 1574 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 911 பேருக்கும், டெல்லியில் 903 பேருக்கும், ராஜஸ்தானில் 553 பேருக்கும், மத்திய பிரதேசத்தில் 435 பேருக்கும், உத்தர பிரதேசத்தில் 431 பேருக்கும், தெலுங்கானாவில் 473 பேருக்கும், கேரளாவில் 364 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

About Admin

Check Also

பெகாசஸ் ஸ்பைவேர்; இஸ்ரேல் நிறுவனம் மீது ஆப்பிள் நிறுவனம் வழக்கு

வாஷிங்டன்: பெகாசஸ் ஸ்பைவேர் என்னும் உளவு மென்பொருளை ஐபோன்களில் நிறுவுவதற்கு எதிராக அதனை உருவாக்கிய இஸ்ரேலின் என்.எஸ்.ஓ நிறுவனம் மீது …

MyHoster