வரும் தீபாவளி பண்டிகையை ஒட்டி அரசு அதிகாரிகள், அமைச்சர்களுக்கு வரும் பரிசுப் பொருட்கள் தொடர்பாக முதல்வர் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களும், தேர்தல் வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. கடந்த ஐந்து மாத ஆட்சியில் தங்களது செயல்பாடுகளால் தமிழக மக்களிடம் நற்பெயர் சம்மாதித்து வைத்துள்ளனர். அதேசமயம் திமுக அமைச்சர்கள், எம்.பிக்களின் சர்ச்சைக்குரிய பேச்சுகள், கைது நடவடிக்கைகள், உள்ளாட்சி தேர்தலில் நடந்த அத்துமீறல்கள், போக்குவரத்து துறையில் தீபாவளி ஸ்வீட் வாங்குவதற்கு விடப்பட்ட டெண்டர் உள்ளிட்ட விஷயங்களில் திமுக சர்ச்சையில் சிக்கியது.இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட நபர்களை அழைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் அரசின் செயல்பாடுகள் குறித்து ஆளுநர் அறிக்கை கேட்ட போது மவுனம் காத்தது, இல்லம் தேடிக் கல்வி திட்டத்தில் புதிய கல்வி கொள்கையின் தாக்கம் என விமர்சனங்களும் எழாமல் இல்லை. தற்போது 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் தமிழக மக்கள் ஆதரவால் திமுக அமோக வெற்றி பெற்றுள்ளது.இதே உற்சாகத்தில் அடுத்த சில மாதங்களில் வரவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் வாகை சூட வேண்டும் என்று முதல்வர் விரும்புகிறார். அதற்குள் திமுக அரசு மீது சர்ச்சைகள் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றும், பொதுமக்களிடம் தவறான அபிப்பிராயம் வந்து விடக்கூடாது என்று மிகவும் கவனமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அடுத்த பத்து ஆண்டுகளுக்கு தமிழகத்தில் திமுக ஆட்சி நிலைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தொலைநோக்கு பார்வையுடன் மு.க.ஸ்டாலின் காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார்.இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் பிறப்பித்த உத்தரவு அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுக்கு சற்றே ஏமாற்றம் அளித்துள்ளது. அதாவது, ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை ஒட்டி அரசுப் பணிகளை செய்யும் தனியார் நிறுவனங்கள் அந்தந்த துறை சார்ந்த அரசு அதிகாரிகள், துறை அமைச்சர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்குவது வழக்கம். அதுவும் ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்ததை அடுத்து முதல் தீபாவளி பண்டிகை வருகிறது.இதனால் ‘தல’ தீபாவளி என்று அடைமொழி கொடுத்து உற்சாகம் காட்டி வருகிறார்கள். இந்த சூழலில் அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் மற்றும் அவர்களது உதவியாளர்கள் யாரும் தீபாவளி பரிசு மற்றும் அன்பளிப்புகளை எந்த காரணம் கொண்டும் வாங்கக் கூடாது என்று அதிரடியாக உத்தரவு போட்டுள்ளார். மேலும் தீபாவளி பரிசு பொருட்களுடன் வரும் வாகனங்களை தலைமை செயலக வளாகத்திற்குள் அனுமதிக்கவே கூடாது என்று கறாராக சொல்லி விட்டாராம்.
கண்காணிக்க குழு
இதுகுறித்து தலைமை செயலகத்தில் பணிபுரியும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை தனது உத்தரவையும் மீறி அரசு தரப்பில் இருந்து யாராவது தீபாவளி பரிசுப் பொருட்கள் பெறுகிறார்களா என்பதை கண்காணிக்க குழு அமைத்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது பரிசு பொருட்களுடன் தீபாவளியை ஜோராக கொண்டாட நினைத்திருந்த அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் மத்தியில் சற்றே ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.
Rathiri Rounds Never Stop