Breaking News
Home / செய்திகள் / பேரியம் ரசாயனம் கலந்த பட்டாசுகளை கொண்டுசெல்ல, வெடிக்க தடை: தமிழக அரசு

பேரியம் ரசாயனம் கலந்த பட்டாசுகளை கொண்டுசெல்ல, வெடிக்க தடை: தமிழக அரசு

சென்னை: உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளை மீண்டும் வலியுறுத்தி, தீபாவளியை முன்னிட்டும் பிற நிகழ்ச்சிகளில் பேரியம் ரசாயனம் கலந்த பட்டாசுகளை கொண்டுசெல்லவோ, வெடிக்கவோ தடை செய்யப்பட்டுள்ளது என தமிழக அரசின் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

latest tamil news

தமிழக அரசின் அறிக்கையில் கூறியுள்ளதாவது: தீபாவளி மற்றும் பிற நிகழ்ச்சிகளில் சாதாரண வகையிலான பட்டாசுகளின் பயன்பாட்டிற்கு எந்தவிதமான தடையும் இல்லை எனவும், பொதுமக்களின் உடல் நலன் மற்றும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்க கூடிய பேரியம் ரசாயனம் கலந்து தயார் செய்யப்பட்ட பட்டாசுகள், மற்றும் சரவெடி பட்டாசுகள் தயாரிக்கவோ, சேமித்து வைக்கவோ, ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லவோ விற்பனை செய்ய அல்லது வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

latest tamil news

உச்ச நீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகளை மீறுவோர் மீது அரசு விதிமுறைகளின்படி, குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

About Admin

Check Also

கோவை மாவட்டத்தை திமுக புறக்கணிக்கிறதா? மாஜி அமைச்சர் வேலுமணி

கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கூறியதாவது:கோவைக்கு வந்த ஸ்டாலின் சாலைகளை சீரமைக்க உத்தரவிடுவார் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster