Breaking News
Home / அரசியல் / அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடலுக்கு சசிகலா அஞ்சலி.. அதிமுக கொடிகட்டிய காரில் வந்தார்..!

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடலுக்கு சசிகலா அஞ்சலி.. அதிமுக கொடிகட்டிய காரில் வந்தார்..!

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடலுக்கு சசிகலா அஞ்சலி.. அதிமுக கொடிகட்டிய காரில் வந்தார்..!

உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் சிகிச்சை பலன் இன்றி நேற்று உயிரிழந்தார்.

இதனையடுத்து இன்று அதிகாலை 4.30 மணியளவில் மதுசூதனின் உடல் தண்டையார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.

இன்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு உள்ளிட்டோருடன் நேரில் வந்து மதுசூதனன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் மதுசூதனன் குடும்பத்தினருக்கும், ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.

இந்நிலையில், காலை 10 மணியளவில் மதுசூதனின் இல்லத்திற்கு அதிமுக கொடி கட்டிய காரில் வந்த சசிகலா, அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் கண்ணீர் மல்க காணப்பட்டார். பின்னர் மதுசூதனனின் குடும்பத்தினருக்கு சசிகலா ஆறுதல் கூறினார்.

Dailyhunt

About Admin

Check Also

சென்னை ‘உஷ்ஷ்ஷ்!’ : இப்படி இருந்தால் கட்சி எப்படி வளரும்?

கட்சி எப்படி வளரும்? அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம், நேற்று முன்தினம் கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில், நகர்ப்புற …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster