Breaking News
Home / அரசியல் / மின் கட்டண எதிர்ப்பினால் அமைச்சர் அளித்த புதிய சலுகை

மின் கட்டண எதிர்ப்பினால் அமைச்சர் அளித்த புதிய சலுகை

மின் கட்டண எதிர்ப்பினால் அமைச்சர் அளித்த புதிய சலுகை

தமிழகத்தில் இதுவரைக்கும் இல்லாத வகையில் மின் கட்டணம் செலுத்துவதற்கு மூன்று வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளர் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி.

சேலம் இரும்பாலை வளாகத்தில் இரண்டாவது கொரோனா சிறப்பு மையத்தில் 500 படுக்கைகள் கொண்ட ஆக்சிஜன் வசதிகளுடன் அமைக்கப்பட்டிருக்கும் மையத்தினை திறந்து வைத்து செய்தியாளர்களிடம் பேசினார் செந்தில்பாலாஜி.

அப்போது மின்கட்டண விவகாரம் குறித்து எழுப்பிய கேள்விகளூக்கு, ”ஊரடங்கு காரணமாக வீடுகள் தோறும் சென்று மின் கணக்கீடு செய்ய முடியாத நிலை இருக்கிறது. இதனால் மின் கட்டணம் செலுத்துவதற்கு பல்வேறு வாய்ப்புகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

கடந்த மே மாதம் செலுத்த வேண்டிய மின் கட்டணத்திற்கு 2019ம் ஆண்டு மே மாதம் செலுத்திய மின் கட்டணத்தினையே செலுத்தலாம் என்று கூறப்பட்டிருந்தது. இந்த வாய்ப்பினை 85 சதவிகிதம் பேர் ஏற்றுக்கொண்டுள்ளனர். அதன்படியே கட்டணம் செலுத்தி வருகின்றனர்.

ஆனால், 15 சதவிகிதம் பேர் இந்த முறையில் பணம் செலுத்துவதால் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் தெரிவித்து வருகிறார்கள். அதனால் இதற்கு தீர்வு காண முடிவெடுக்கப்பட்டுள்ளது. மே மாத கட்டணத்தை செலுத்தினால் அதிக கட்டணம் வருகிரது என்று நினைப்பவர்கள், மே மாதத்திற்கு முந்தைய ஏப்ரல் மாத மின் கட்டணத்தினை செலுத்தலாம்.

அதுவும் இல்லாவிட்டால், மின்மீட்டரில் பதிவாகி இருக்கும் மின் பதிவு அளவீட்டினை செல்போனில் படம் பிடித்துக்கொண்டு போய் மின் அலுவலகத்தில் காட்டினால் அதை கண்கீடு செய்து தொகையினை செலுத்தலாம்.

தமிழகத்தில் இதுவரைக்கும் இல்லாத அளவுக்கு மின்கட்டணம் செலுத்த மூன்று வாய்ப்புகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், டெபாசிட் தொகையும் வசூலிக்கப்பவில்லை. இந்த ஒரு சலுகையும் அளிக்கப்பட்டிருக்கிறது” என்றார்.

Dailyhunt

About Admin

Check Also

சென்னை ‘உஷ்ஷ்ஷ்!’ : இப்படி இருந்தால் கட்சி எப்படி வளரும்?

கட்சி எப்படி வளரும்? அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம், நேற்று முன்தினம் கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில், நகர்ப்புற …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster