
புதுக்கோட்டை மாவட்டத்தில் தாலுகா வாரியாக அரசு அலுவலர்களை நியமித்து ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மறுவாழ்வு சேவையில் ஈடுபட்டு வரும் மக்கள் நல்வாழ்வுத்துறை:
தமிழகத்தில் எந்த மாவட்டத்திலும் இல்லாத அளவிற்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் வீடற்ற மற்றும் ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு பாதுகாப்பு வசதி, உணவு, உறைவிடம், மருத்துவம் என சிறப்பான சேவையில் இறங்கி தொண்டில் ஈடுபட்டு வருகின்றனர், புதுக்கோட்டை மாவட்ட மனநல மருத்துவமனை அலுவலர்கள்.
08/06/2021 அன்று வடவாளம் பஞ்சாயத்தை சேர்ந்த தெற்கு ராயப்பட்டி கிராமத்தில் பிறந்த ஒருவர் பல வருடமாக மன நலம் பாதிக்கப்பட்டு சுயநலமற்ற நிலமையில் சுற்றி திரிகிறார் என்று புதுக்கோட்டை மாவட்ட மனநலத்திட்ட அலுவலர் டாக்டர். கார்த்திக் தெய்வநாயகம் அவர்களிடம், மாவட்ட செய்தியாளர் வீ.வீரராகவன் அவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவரை மீட்டு சிகிச்சையளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்ததின் பேரில் 10/06/2021 இன்று மனநலம் பாதிக்கப்பட்டவரை புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் சுற்றி திரிந்த போது மனநல மாவட்ட மருத்துவக்குழுவினர் மற்றும் காவல்துறையினர், வருவாய்த்துறையினர் விரைந்து மீட்டனர்.
உணவு, உடை, முதலுதவி வழங்கி மனநல அவசர சிகிச்சை மற்றும் மீள் மையத்திற்கு அழைத்து வந்து பாதுகாப்பு வழங்கி சிகிச்சையளித்து வருகின்றனர் மாவட்ட மனநல திட்டக் குழுவினர்.
அதோடு இல்லாமல் கோவிட் – 19 கொரோனா வைரஸ் நோய் பெருந்தொ ற்று காலத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் வீடற்ற மற்றும் ஆதரவற்று தெருக்களில் சுற்றி திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு Dr.முத்துலெட்சுமி நினைவு அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள மனநலப்பிரிவில் சேர்க்க, மாவட்ட ஆட்சித் தலைவர் பி. உமா மகேஸ்வரி அவர்களின் பேரிடர் கால செயல்முறை ஆணையின்படி அனைத்து தாலுகாவிலும் “தாலுகா அளவிலான ஆதரவற்ற மனநோயாளிகள் மீட்புக் குழுக்கள்” அமைக்கப்பட்டுள்ளன. காவல், வருவாய், நகராட்சி ஊராட்சி, மாற்றத்திறனாளிகள் நலத் துறை மற்றும் சுகாதாரதுறையை சார்ந்தவர்கள் இக்குழுவில் உள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்ட தாலுகா அளவிலான பல அரசு துறைகளை கொண்ட இக்குழுக்கள் சிறப்பாக சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
Rathiri Rounds Never Stop