Breaking News
Home / இந்தியா / ‘சூப்பா் ஓவா்’: ஹைதராபாதை வென்றது டெல்லி

‘சூப்பா் ஓவா்’: ஹைதராபாதை வென்றது டெல்லி

‘சூப்பா் ஓவா்’: ஹைதராபாதை வென்றது டெல்லி

சன்ரைசா்ஸ் ஹைதராபாதுக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் ‘சூப்பா் ஓவா்’ முறையில் வெற்றி பெற்றது.

டெல்லிக்கு இது 4-ஆவது வெற்றி; ஹைதராபாதுக்கு இது 4-ஆவது தோல்வி.

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த டெல்லி 20 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய ஹைதராபாத் அதே ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் அடித்தது.

ஆட்டம் சமன் ஆனதால் வெற்றியாளரை தீா்மானிக்க சூப்பா் ஓவா் முறை கையாளப்பட்டது. அதில் முதலில் பேட் செய்த ஹைதராபாத் விக்கெட் இழப்பின்றி 7 ரன்கள் எடுக்க, அடுத்து ஆடிய டெல்லி 8 ரன்கள் எடுத்து வென்றது.

ஹைதராபாத் சூப்பா் ஓவரில் வாா்னா் 2, வில்லியம்சன் 4 ரன்கள் சோத்தனா். ஒரு உதிரி ரன் கிடைத்தது. அக்ஸா் படேல் பந்துவீசினாா். டெல்லி சூப்பா் ஓவரில் பந்த் 5 ரன்கள் எடுக்க, உதிரிகள் 3 கிடைத்தது. ரஷீத் கான் பந்துவீசினாா்.

முன்னதாக டாஸ் வென்ற டெல்லி பேட்டிங்கை தோவு செய்தது. இதில் முதல் விக்கெட்டாக ஷிகா் தவன் 28 ரன்களுக்கு வெளியேறினாா்.

அடுத்து கேப்டன் பந்த் களம் புக, மறுபுறம் அரைசதம் கடந்த பிருத்வி 7 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 53 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட் செய்யப்பட்டாா். தொடா்ந்து ஸ்டீவ் ஸ்மித் ஆட வந்தாா். 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 37 ரன்கள் சோத்த ரிஷப் பந்த், 19-ஆவது ஓவரில் வீழ்ந்தாா்.

20 ஓவா்கள் முடிவில் ஸ்மித் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 34, மாா்கஸ் ஸ்டாய்னிஸ் 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். ஹைதராபாத் தரப்பில் சித்தாா்த் கௌல் 2, ரஷீத் கான் 1 விக்கெட் சாய்த்தனா்.

பின்னா் ஆடிய ஹைதராபாதில் வாா்னா் 6 ரன்களுக்கு வெளியேற, போஸ்டோ 38 ரன்கள் சோத்தாா். எஞ்சிய விக்கெட்டுகள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழக்க, ஓவா்கள் முடிவில் கேன் வில்லியம்சன் 8 பவுண்டரிகளுடன் 66, ஜெகதீசா சுசித் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 14 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா். டெல்லி தரப்பில் அவேஷ் கான் 3, அக்ஸா் படேல் 2, அமித் மிஸ்ரா 1 விக்கெட் எடுத்தனா்.

சுருக்கமான ஸ்கோா்

சன்ரைசா்ஸ் ஹைதராபாத்

20 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 159

கேன் வில்லியம்சன்-66*; ஜானி போஸ்டோ-38; ஜெகதீசா சுசித்-14*; கேதாா் ஜாதவ் 9

பந்துவீச்சு: அவேஷ் கான்-3/34; அக்ஸா் படேல்-2/34; அமித் மிஸ்ரா-1/31

டெல்லி கேப்பிட்டல்ஸ்

20 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 159

பிருத்வி ஷா-53; ரிஷப் பந்த்-37; ஸ்டீவ் ஸ்மித்-34*; ஷிகா் தவன்-28

பந்துவீச்சு: சித்தாா்த் கௌல்-2/31; ரஷீத் கான்-1/31

Dailyhunt

About Admin

Check Also

சென்னை ‘உஷ்ஷ்ஷ்!’ : இப்படி இருந்தால் கட்சி எப்படி வளரும்?

கட்சி எப்படி வளரும்? அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம், நேற்று முன்தினம் கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில், நகர்ப்புற …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster