அதிர்ச்சி! சிஎஸ்கே அணியின் இயக்குநர் திடீர் மரணம்!!

சிஎஸ்கே நிறுவனத்தின் இயக்குநரும் மற்றும் தலைவருமான சபாரத்தினம் காலமானார். அவருக்கு வயது 80.
இவர் சிஎஸ்கே கிரிக்கெட் நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் தலைவர் பொறுப்பு மட்டுமல்லாமல், பெரு நிறுவனங்கள் பலவற்றில் உயர் பொறுப்பில் இருந்துள்ளார்.
வயது முதிர்வால் ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 2 நாட்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், உயிரிழந்தார். அவரது மனைவி ஏற்கனவே மறைந்துவிட்டார். அவர்களுக்கு இரு மகன்களும் இரு மகள்களும் உள்ளனர்.
மறைந்த சபா ரத்தினத்தின் உடல் அரசின் கரோனா கட்டுப்பாடு விதிகளுக்கு உட்பட்டு நேற்றுமாலை சென்னை பெசன்ட் நகர்மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்ட து.

காரைக்குடியில் பிறந்த எல்.சபாரத்தினம், செட்டிநாடு சிமென்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் செயல் இயக்குநராக பல ஆண்டுகள் பணியாற்றியவர்.
கோரமண்டல் சுகர்ஸ் நிறுவனம், ஐசிஎல் நிதி சேவைநிறுவனம், ஐசிஎல் சிப்பிங் லிமிடெட், கோரமண்டல் எலக்ட்ரிக் நிறுவனம், ஐசிஎல் செக்யூரிட்டீஸ் என பல்வேறு பெரு நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் இருந்து திறம்பட பணியாற்றியுள்ளார்.
சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், சிப்காட் என்று பொதுத்துறை, தமிழக அரசு நிறுவனங்களில் இயக்குநராகப் பணியாற்றியுள்ளார் .newstm.in
Rathiri Rounds Never Stop