Breaking News
Home / அரசியல் / சசிகலா குறித்து வெளியான பகீர் தகவல் ! தொண்டர்கள் அதிர்ச்சி !!

சசிகலா குறித்து வெளியான பகீர் தகவல் ! தொண்டர்கள் அதிர்ச்சி !!

சசிகலா குறித்து வெளியான பகீர் தகவல் ! தொண்டர்கள் அதிர்ச்சி !!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உயிர் தோழியாக இருந்து வந்த சசிகலாவுக்கு, டுவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதள கணக்குகள் ஏதும் இல்லை என அமமுக அறிவித்துள்ளது.

சொத்துகுவிப்பு வழக்கில் 4 வருடம் சிறை தண்டனை முடிந்து பெங்களூருவில் இருந்து சசிகலா இன்று காலை சென்னை திரும்பி வந்துள்ளார். பெங்களூருவில் அவர் தங்கியிருந்த தனியார் விடுதிக்கு காரில் புறப்பட்ட போது அதிமுக கொடி பயன்படுத்தினார் என புகார் எழுந்தது. இது தொடர்பாக, அமைச்சர்களின் புகாரால் சசிகலா அதிமுக கொடி போட்ட காரை போலீசார் தடை விதித்துள்ளனர். இந்நிலையில் சசிகலா காரில் மீண்டும் அதிமுக கொடி கட்டப்பட்டு இருந்தது. இதனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா இடையே மோதல் வெடித்தது.

இதனிடையே, உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்பேரில், செங்கல்பட்டு அருகே உள்ள சசிகலாவின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை தமிழக அரசு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே, இளவரசி மற்றும் சுதாகரன் சொத்துக்களை தமிழக அரசு பறிமுதல் செய்த நிலையில், தற்போது சசிகலாவின் சொத்துக்களையும் பறிமுதல் செய்துள்ளது. இந்நிலையில், தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் இளவரசி மற்றும் சுதாகரனுக்கு சொந்தமான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளது.

அதாவது, தஞ்சாவூர் வ.உ.சி. நகர் முதல் தெருவில், சுமார் 26 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் இளவரசி மற்றும் சுதாரகரனுக்கு சொந்தமான சொத்து பறிமுதல் செய்யப்பட்டு, அரசுடமையாக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான 7 சொத்துக்கள் அரசுடைமையாக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் பிறப்பித்துள்ளார். இந்த சம்பவம் மூலம் எடப்பாடி பழனிசாமி – சசிகலா இடையே மோதல் மேலும் வெடித்துள்ளது.

இதனிடையே, சின்னம்மா என்ற பெயரில் ஃபேஸ்புக் மற்றும் ட்டுவிட்டர் கணக்குகள் துவங்கப்பட்டு, தமிழக அரசு மீதும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதும் கடும் விமர்சனம் வைக்கப்படுகிறது.

இந்நிலையில், சின்னம்மா அவர்களின் பெயரில் எந்த சமூகவலைத்தள பக்கமும் அதிகாரப்பூர்வமாக இல்லை. அவர் பெயரில் ட்விட்டரில் இருக்கும் பக்கங்கள் எதுவும் அதிகாரப்பூர்வமானது அல்ல என அமமுக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

சசிகலா பெயரில் உலா வந்த போலி கணக்குகள் குறித்து தகவல் அறிந்த அவரது ஆதரவாளர்களும், உறவினர்களும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், சமூக வலைதளத்தில் உள்ள போலி கணக்குகளை நீக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Thanks to Dailyhunt

About Admin

Check Also

சென்னை ‘உஷ்ஷ்ஷ்!’ : இப்படி இருந்தால் கட்சி எப்படி வளரும்?

கட்சி எப்படி வளரும்? அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம், நேற்று முன்தினம் கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில், நகர்ப்புற …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster