இந்தியாவிலேயே முதல் நடிகை… சமந்தாவின் லேட்டஸ்ட் சாதனை!
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. நாகார்ஜூனா குடும்பத்தின் மருமகளான பின்னரும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவரது புகுந்த வீட்டில் இருக்கும் அனைவருமே திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் என்பதால் தன்னுடைய கஷ்டத்தைப் புரிந்துகொண்டதாகவும் பெருமையாகச் சொல்கிறார் சமந்தா.
திருமணமான பின்னர், தற்போது கிளாமரான கேரக்டர்களில் நடிப்பதில்லை என்று அவர் முடிவெடுத்திருக்கிறார். அதேபோல், நடிப்புக்கு ஸ்கோப் இருக்கும் படங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப் போவதாகவும் சொல்லியிருந்தார். இந்தநிலையில், அமேசான் பிரைமில் வெளியாகி ஹிட்டடித்திருந்த ஃபேமிலி மேன் சீரியஸின் இரண்டாவது பாகத்தில் சமந்தா நடித்திருக்கிறார்.
மனோஜ் பாஜ்பாய் – நம்ம ஊர் பிரியாமணி ஆகியோர் நடித்திருந்த ஃபேமிலி மேன் சீரியஸ் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. அந்த சீரியஸின் சீக்குவலாக ஃபேமிலி மேன் – 2 வரும் பிப்ரவரி 12-ம் தேதி முதல் ஸ்ட்ரீமாக இருக்கிறது. இதற்கான அறிவிப்பை அமேசான் பிரைம் ட்விட்டரில் வெளியிட்டது. அப்போது சமந்தாவுக்கென தனி எமோஜியையும் டிவிட்டர் அறிமுகப்படுத்தியது. இந்த சீரியஸில் சமந்தா மிரட்டும் வில்லியாகப் புதிய அவதாரம் எடுக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Thanks to Dailyhunt
Rathiri Rounds Never Stop