Breaking News
Home / இந்தியா / இஸ்லாத்திலிருந்து இந்து மதத்திற்கு மாறியதால் கொலை மிரட்டல்..! பாதுகாப்பு வழங்கிய உ.பி. போலீசார்..!

இஸ்லாத்திலிருந்து இந்து மதத்திற்கு மாறியதால் கொலை மிரட்டல்..! பாதுகாப்பு வழங்கிய உ.பி. போலீசார்..!

இந்து மதத்திற்கு மாறிய பின்னர் அச்சுறுத்தல்கள் எதிர்கொண்டு வந்ததாகக் கூறப்படும் ஒருவருக்கு உத்தரபிரதேச காவல்துறை பாதுகாப்பு அளித்துள்ளது…!

இஸ்லாமியரான காசிம் என்று அழைக்கப்பட்ட அலிகரில் வசிக்கும் நபர், சமீபத்தில் இந்து மதத்திற்கு மாறியதோடு, தனது பெயரையும் கரம்வீர்என மாற்றிக்கொண்டார். இஸ்லாம் மதத்திலிருந்து இந்து மதத்திற்கு மாறியதால் தனக்கு கொலை மிரட்டல் வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

“நான் மதம் மாறிய பிறகு, எனக்கும் எனது குடும்பத்திற்கும் கொலை மிரட்டல் வருகிறது. எனக்கு போலீஸ் பாதுகாப்பு தேவை” என்று கரம்வீர் கூறினார்.

அவரது புகாரின் பேரில், அலிகார் போலீசார் அவருக்கு பாதுகாப்பு அளித்துள்ளனர். “அந்த நபர் அளித்த புகாரின் அடிப்படையில் நாங்கள் வழக்கு பதிவு செய்துள்ளோம். அவர் சிலரால் அச்சுறுத்தப்படுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். எனவே நாங்கள் அவரது இல்லத்தில் பாதுகாப்புக்கு போலீசாரை நிறுத்தியுள்ளோம்.” என்று அலிகார் காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த்குமார் தெரிவித்தார்.

இந்த வழக்கு டெல்லி கேட் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கரம்வீரும் அவரது மனைவி அனிதாவும் சில ஆண்டுகளுக்கு முன்பு இந்து சடங்குகளின்படி திருமணம் செய்து கொண்டனர். மேலும் அவர்களது திருமணத்தையும் நீதிமன்றத்தில் பதிவு செய்தனர். “திருமணமான பல வருடங்களுக்குப் பிறகும் நாங்கள் இருவரும் எங்கள் சொந்த மதத்திற்கு திரும்பியுள்ளோம்.” என்று அவர் மேலும் கூறினார்.

கரம்வீரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக குற்றம் சாட்டிய அவரது மனைவி அனிதா, தனது புதிய நம்பிக்கையை கைவிட சிலர் அவருக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிக்கிறார்கள் என்று கூறினார்.

“என் கணவர் பலமுறை அச்சுறுத்தல்களைப் பெறுகிறார். சமீபத்தில் ஏற்றுக்கொண்ட மதத்தை கைவிடுமாறு சிலர் அவரிடம் கேட்கிறார்கள். எங்கள் உயிருக்கு அச்சுறுத்தல்கள் வந்து கொண்டிருக்கின்றன. 5 நாட்களாக வீட்டிற்குச் செல்லவில்லை.” என்று அனிதா மேலும் கூறினார்.

இது தொடர்பாக தற்போது காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

Thanks to daily hunt

About Admin

Check Also

இந்தியாவில் புதுவகை உருமாறிய கொரோனா பாதிப்பில்லை: மத்திய அரசு

புதுடில்லி: தென்ஆப்ரிக்காவில் பி.1.1.529 என்ற புதிய உருமாறிய கொரோனா கண்டறியப்பட்ட நிலையில், இந்தியாவில் இதுவரை இந்த புதுவகை கொரோனா தொற்று …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster