Breaking News
Home / இந்தியா / உலகில் கொரோனா பாதிப்பு 5.53 கோடியை தாண்டியது..!

உலகில் கொரோனா பாதிப்பு 5.53 கோடியை தாண்டியது..!

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5.53 கோடியாக உயர்ந்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. இந்நிலையில், உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி 55,335,839 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 38,482,661 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 13 லட்சத்து 31 ஆயிரத்து 710 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவியவர்களில் 15,521,468 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 99,737 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா – பாதிப்பு – 11,533,859, உயிரிழப்பு – 252,633, குணமடைந்தோர் – 7,018,736
இந்தியா – பாதிப்பு – 8,874,172, உயிரிழப்பு – 130,559, குணமடைந்தோர் – 8,288,169
பிரேசில் – பாதிப்பு – 5,876,740, உயிரிழப்பு – 166,067, குணமடைந்தோர் – 5,322,406

பிரான்ஸ் – பாதிப்பு – 1,991,233, உயிரிழப்பு – 45,054, குணமடைந்தோர் – 140,880
ரஷியா – பாதிப்பு – 1,948,603, உயிரிழப்பு – 33,489, குணமடைந்தோர் – 1,453,849
கொலம்பியா – பாதிப்பு – 1,205,217, உயிரிழப்பு -34,223, குணமடைந்தோர் – 1,111,867

 

thanks to Dinakaran

About Admin

Check Also

அரசியல் சாசனப்படி குடிமக்களின் உரிமைகளை காக்கவேண்டும் : மோடி

புதுடில்லி:அரசியல் சாசனப்படி குடிமக்களின் உரிமைகளை காக்கவேண்டும் என அரசியல் சாசன நாள் விழாவில் பிரதமர் மோடி கூறினார்.     …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster