
பீகாரில் ஆளும் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிதீஷ், ஜே.டி.யு-வின் சரிவை சுட்டிக்காட்டி முதல்வர் பதவியில் விருப்பமின்மையை வெளிப்படுத்தினார். ஆனால், பாஜகவின் மூத்த தலைவர்கள் அவரை முதல்வராக தொடர வற்புறுத்தினர்.
பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி (என்.டி.ஏ) கூட்டணிக் கட்சிகளின் கூட்டுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கூட்டம் சட்டமன்றக் கட்சியின் தலைவரைத் தேர்ந்தெடுப்பது உட்பட அடுத்த அரசாங்க அமைப்பது தொடர்பான விவரங்களை இறுதி செய்ய உள்ளது. பி.டி.ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திப்படி, நிதீஷ் குமார் நவம்பர் 15ம் தேதி என்.டி.ஏ சட்டமன்றக் கட்சியின் தலைவராக அறிவிக்கப்படுவார்.
நிதீஷ்குமார் வெள்ளிக்கிழமை பீகார் ஆளுநர் பாகு சவுகானை சந்தித்து தனது அமைச்சரவையின் ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்து மாநில சட்டசபையைக் கலைக்க பரிந்துரை செய்ததாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆளுநர் பாகு சவுகானும் ராஜினாமாவை ஏற்றுக் கொண்டு, ஜே.டி (யு) தலைவரும், மூன்று முறை முதல்வராக இருந்த நிதீஷ் குமாரை மாநிலத்தின் புதிய என்.டி.ஏ அரசு அமைக்கும் வரை காபந்து முதலமைச்சராக தொடருமாறு கேட்டுக்கொண்டார்.
இதனிடையே, பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி (என்.டி.ஏ) கூட்டணிக் கட்சிகளின் கூட்டுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கூட்டம் சட்டமன்றக் கட்சியின் தலைவரைத் தேர்ந்தெடுப்பது உட்பட அடுத்த அரசாங்க அமைப்பது தொடர்பான விவரங்களை இறுதி செய்ய உள்ளது.
“இந்த கூட்டம், நவம்பர் 15, ஞாயிற்றுக்கிழமை மதியம் 12:30 மணிக்கு தொடங்கும். அதில் அனைத்து முடிவுகளும் எடுக்கப்படும்” என்று பி.டி.ஐ. செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
பி.டி.ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திப்படி, நிதீஷ் குமார் நவம்பர் 15ம் தேதி என்.டி.ஏ சட்டமன்றக் கட்சியின் தலைவராக அறிவிக்கப்படுவார். இது நான்கு தொகுதி கட்சிகளைச் சேர்ந்த தேசிய ஜனநாயக கூட்டணித் தலைவர்களின் முறைசாரா கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஜே.டி. (யு), பாஜக, எச்.ஏ.எம் (எஸ்), விகாஷீல் இன்சான் கட்சி (வி.ஐ.பி) – வெள்ளிக்கிழமை நிதீஷின் இல்லத்தில் அந்த கூட்டம் நடைபெற்றது.
பீகார் மாநிலத்தில் உள்ள மொத்தம் 243 மன்றத் தொகுதிகளில், தேசிய ஜனநாயக கூட்டணி 122 இடங்களைப் பிடித்தது. அதில், பாஜக 74 இடங்களுடன் அதிக இடங்களைப் பிடித்த பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. ஜே.டி (யு) 43 இடங்களை மட்டுமே வென்றுள்ளது. கூட்டணி கட்சிகளான வி.ஐ.பி, எச்.ஏ.எம் (எஸ்) இந்த தேர்தலில் தலா 4 இடங்களைப் பெற்றன. இதன் மூலம் என்.டி.ஏ மொத்தம் 125 இடங்களைப் பெற்றுள்ளது.
தேர்தல் நடைமுறை தொடங்குவதற்கு முன்பே ஆளும் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிதீஷ், ஜே.டி.(யு)வின் சரிவைக் கண்டதையடுத்து முதல்வர் பதவியில் தனது விருப்பமின்மையை வெளிப்படுத்தினார் என்று ஏற்கெனவே இந்தியன் எக்ஸ்பிரஸ் குறிப்பிட்டது. இருப்பினும், பாஜகவின் மூத்த தலைவர்கள் அவரை முதல்வராக தொடர வற்புறுத்தி, அரசாங்கத்தை நடத்துவதில் முன்பு போலவே முழு சுதந்திரமும் இருக்கும் என்று அவருக்கு உறுதியளித்தனர்.
இந்த முறை ஜே.டி.யுவின் எண்ணிக்கை 71-ல் இருந்து 43 ஆக குறைந்தது. 2005 சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர் அக்கட்சி வெற்றி பெற்ற மோசமான எண்ணிக்கை ஆகும்.
சிராக் பாஸ்வானும் அவருடைய எல்.ஜே.பி கட்சியும் ஜே.டி.யு-வை காயப்படுத்திய விதத்தில் நிதீஷ் மிகவும் வருத்தப்பட்டார் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. பாஜகவின் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், “சிராக் குறைந்தபட்சம் 25-30 இடங்களில் ஜே.டி.யு-வின் வெற்றி வாய்ப்புகளை கெடுத்துவிட்டார் என்று அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். பாஜக இப்போது கூட்டணியில் அதிக இடங்களைப் பெற்ற கட்சியாக இருந்தாலும் நிதீஷை முதல்வராக இருக்குமாறு நாங்கள் அவரை வற்புறுத்தினோம்.” என்று தெரிவித்துள்ளது.
Thanks to indian express
Rathiri Rounds Never Stop