வாணியம்பாடி அருகே நிலத்தகராறில் தாத்தா, பேரன் சரமாரியாக வெட்டி கொலை
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த ஏரிப்பள்ளம் வட்டத்தை சேர்ந்த பெருமாளுக்கும், அவரது உறவினர்களுக்கும் நிலத்தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று ஏரிக்கொல்லை வட்டம் பகுதியில் இருந்து, பெருமாள் தனது பேரன் சந்துருவை ழைத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் கொத்தக்கோட்டை என்ற இடத்தில் உள்ள பால் கூட்டுறவு சங்கத்துக்கு சென்றார். அப்போது வெப்பலம்பட்டி ரோட்டில் மறைந்திருந்த மர்ம நபர்கள் பெருமாளை சரமாரியாக வெட்டினர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்து போனார்.
இதனை தடுக்க முயன்ற அவரது பேரன் சந்துருவையும் மர்மநபர்கள் சரமாரியாக வெட்டியுள்ளனர். சந்துருவை வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தபோதும், சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் இறந்துவிட்டான். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், தாத்தா, பேரனை வெட்டி கொலை செய்த மர்ம கும்பலை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் வாணியம்பாடி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Thanks to: Daily Hunt
Rathiri Rounds Never Stop