மணிரத்னம், ஜெயேந்திரா இருவரும் தயாரித்து வரும் ‘நவரசா’ என்ற ஆந்தாலஜி படத்தில் இடம்பெற்றுள்ளவர்களின் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகள் மூடப்பட்டிருக்கும் நிலையில் ஓடிடி தளத்துக்காக சில முன்னணி இயக்குநர்கள் ஆந்தாலஜி திரைப்படம் இயக்கி வருகின்றனர். சமீபத்தில் கார்த்திக் சுப்புராஜ், கவுதம் மேனன், சுதா கொங்கரா, ராஜீவ் மேனன், சுஹாசினி இணைந்து ‘புத்தம் புதுக்காலை’ என்ற ஆந்தாலஜி படத்தை இயக்கியிருந்தனர். இந்தப் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றன.
இந்நிலையில் அடுத்ததாக மணிரத்னம் ஜெயேந்திரா இணைந்து தயாரிக்கும் ‘நவராசா’ என்ற ஆந்தாலஜி படம் உருவாகி வருகிறது. கே.வி.ஆனந்த், கவுதம் மேனன், கார்த்திக் நரேன், பொன்ராம், ஹலிதா சமீம், அரவிந்த் சாமி, பிஜோய் நம்பியார் உள்ளிட்ட 9 இயக்குநர்களின் கதை இந்த ஆந்தாலஜி படத்தில் இடம்பெற்றுள்ளது.
சூர்யா, அரவிந்த்சாமி, சித்தார்த், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களும் ஐஸ்வர்யா ராஜேஷ், ரேவதி, பூர்ணா, ரித்விகா நித்யா மேனன் உள்ளிட்ட முன்னணி நடிகைகளும் நடித்து வருகின்றனர்.
இதன் ஒளிப்பதிவாளர்களாக சந்தோஷ் சிவன், பாலசுப்பிரமணியன், மனோஜ் பரஹம்சா, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா உள்ளிட்டோர் பணியாற்றுகிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான், ஜிப்ரான், இமான், கோவிந்த் வசந்தா, ஜஸ்டின் பிரபாகரன், அருள்தேவ், கார்த்திக், ரோன் எத்தன் யோஹான் ஆகியோர் இசையமைப்பாளர்களாக பணிபுரிகிறார்கள்.
கொரோனா நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள திரையுலகிற்கு நிதி திரட்டும் நோக்கில் ‘நவரசா’ என்ற ஆந்தாலாஜி உருவாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.
Thanks to : news 18
Rathiri Rounds Never Stop