Breaking News
Home / செய்திகள் / பெங்களூரிலிருந்து சுமார் 45 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் தனிப்படை போலீசார் பறிமுதல் !!

பெங்களூரிலிருந்து சுமார் 45 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் தனிப்படை போலீசார் பறிமுதல் !!

பெங்களூரிலிருந்து சென்னைக்கு கண்டைநர் லாரி மூலமாக கொண்டு வரப்பட்ட சுமார் 45 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் தனிப்படை போலீசார் பறிமுதல் செய்து உள்ளார்.
பெங்களூரில் இருந்து சென்னைக்கு குட்கா பொருட்கள் கொண்டு வரப்படுவதாக மயிலாப்பூர் மாவட்ட துணை ஆணையர்
உயர் திரு.சேஷசாங்சாய்
அவர்களுக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் அடிப்படையில் தனிப்படை போலீசார்மாவட்ட எல்லையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். நேற்றிரவு 7 மணி அளவில் ஸ்ரீபெரும்புதூரில்சவித்தா பொறியியல் கல்லூரி பின்புறம்
சந்தேகத்திற்கிடமாக கண்டெய்னர் லாரி ஒன்று வந்தது.அதனை தனிப்படை போலீசார் லாரியை மறித்து சோதனை செய்ததில் ஐந்தரை டன் எடையுள்ள சுமார் 45 லட்சம் மதிப்பிலான குட்கா இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து, தனிப்படை போலீசார்கண்டெய்னர் லாரியுடன் குட்காவைபறிமுதல் செய்தனர்.

 

 

இந்த சம்பவத்தில் தொடர்புடைய விருதுநகர் மாவட்டம் காளையார் குறிச்சி பகுதியைச் சேர்ந்த முத்துராஜ் (வயது 41) லாரி ஓட்டுநர், விழுப்புரம் மாவட்டம்  கண்ணன்காடு பகுதியைச் சேர்ந்த சிவராஜ் (வயது 26),  திருவண்ணாமலை மாவட்டம்  செல்லங்குப்பம் பகுதியைச் சேர்ந்த அரவிந்த் (வயது 21)  ஆகிய 3 பேரை கைது செய்து அவரிடமிருந்து 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதற்கு மூளையாக செயல்பட்ட நபர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு 1.20 கோடி மதிப்பிலான பொருட்கள்  வைத்திருந்த கனகலிங்கம் என்கிற செந்தில் என் சொந்தமான மதுரவாயில் குடோனில் பறிமுதல் செய்தனர். இதன் தொடர்ச்சியாக பெங்களூரில் இருந்து மொத்தமாக குட்கா பொருட்களை வாங்கி வந்து சென்னையில் வினியோகம் செய்து வந்த தலைமறைவாக உள்ள செந்தில் என்ற கனகலிங்கத்தையும் அவரது கூட்டாளி முனியப்பன் என்பவரையும் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

மேலும், கண்டெய்னர் உரிமையாளர் பெங்களூரை சேர்ந்த
செல்லபாவை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட குட்கா சென்னை மெரினா காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
குட்கா பறிமுதல் செய்த மயிலாப்பூர் மாவட்ட துணை ஆணையர் சேஷசாங்சாயி அவர்களின் தனிப்படையினர் உதவி ஆய்வாளர்
திரு. இளையராஜா
திரு. ராமமூர்த்தி   HC 25978
திரு. சுகுமார்  HC 26611
திரு. ராம்குமார் Gr1 PC 26626
திரு. தியாகராஜன் Gr1 PC 28020
திரு. திருநாவுக்கரசு  Gr1 PC 28570
திரு. சங்கர் தினேஷ் Gr1 PC 39337 ஆகியோரை
உயர் அதிகாரிகள் வெகுவாக பாராட்டினnர்கள்

About Admin

Check Also

கோவை மாவட்டத்தை திமுக புறக்கணிக்கிறதா? மாஜி அமைச்சர் வேலுமணி

கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கூறியதாவது:கோவைக்கு வந்த ஸ்டாலின் சாலைகளை சீரமைக்க உத்தரவிடுவார் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster