உடல் எடையைக் குறைக்க உடற்பயிற்சி செய்வது சிறந்த விஷயம் என்றாலும் அதற்கு வலு சேர்க்கும் விதமாக நம் உணவுப் பழக்கத்திலும் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். அப்போதுதான் நினைத்ததை விட சீக்கிரமே உடல் எடையைக் குறைக்க முடியும். அந்த வகையில் சூடான நீரைப் பருகுவதாலும் பல நன்மைகள் உள்ளன. அவை என்னென்ன பார்க்கலாம்.
பொதுவாகவே ஒருநாளைக்கு 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம் என்கின்றனர். இது ஆரோக்கியமான உடலுக்கு உதவும்.
ஒவ்வொரு உணவுக்குப் பின் குடிப்பதால் செரிமானம் விரைவில் நடக்கும். தேவையற்ற கொழுப்பு கரையும்.
குடிக்கும் நீரை கொதிக்க வைத்து குடிக்கக் கூடிய பதத்தில் வெது வெதுப்பாக குடிப்பது உடலில் சேரக்கூடிய கொழுப்பை கரைக்கும்.
அதேபோல் உணவு சாப்பிட்டுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன் வெதுவெதுப்பான நீரைப் பருகுவதால் பசி குறையும். இதனால் மிதமான உணவை சாப்பிடுவீர்கள். எடை கூடுவதை தவிர்க்கலாம்.
அதேபோல் ஒர்க்அவுட்டிற்குப் பின் குடிப்பதால் கூடுதலான கலோரிகளை எரிக்க முடியும். தேவையற்ற நச்சுகள் விரைவில் வெளியேறும்.
Thanks to : mews 18
Rathiri Rounds Never Stop