வங்கிக் கணக்குடன் ஆதார் இணைப்பு கட்டாயம்!
மத்திய அரசின் விவசாய நிதியுதவித் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. அதைப் பெறுவதற்கு வங்கிக் கணக்கில் ஆதார் இணைப்பு கட்டாயமாகும். அதற்கான கால அவகாசமும் விரைவில் முடிவடையவுள்ளது. அதுகுறித்து இங்கே விரிவாகப் பார்க்கலாம்.
யாருக்கெல்லாம் பணம் கிடைக்கும்?
பயிரிடக்கூடிய நிலங்களைத் தங்களது பெயரில் வைத்திருக்கும் விவசாயிகளின் குடும்பங்கள் பிரதமர் கிசான் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம். கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். அதேநேரம், நிறுவன விவசாயிகள், மாநில மற்றும் மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வு பெற்ற அதிகாரிகள், பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளின் ஊழியர்கள், வருமான வரி செலுத்துபவர்கள், அரசியலமைப்பு பதவிகளை வகிக்கும் உழவர் குடும்பங்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பொறியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்கள் மாதத்திற்கு 10,000 ரூபாய்க்கும் அதிகமான ஓய்வூதியம் பெறுபவர்கள் போன்றோர் இந்த நிதியுதவிக்கு விண்ணப்பிக்க முடியாது.
உங்களுக்குப் பணம் வந்துவிட்டதா?
உங்களது வங்கிக் கணக்கில் நிதியுதவி வந்துவிட்டதா என்ற விவரத்தை பிஎம் கிசான் அதிகாரப்பூர்வ இணையதளமான https://pmkisan.gov.in/ என்பதில் சென்று பார்க்கலாம்.
இந்த முகவரியை ஓப்பன் செய்தால் அதில் ’Farmers Corner’ என்ற வசதி இருக்கும். அதை கிளிக் செய்யவும்.
beneficiary status அல்லது beneficiary list என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும்.
இதை ஓப்பன் செய்தவுடன் புதிய திரை ஒன்று வரும். அதில் ஆதார் எண், மொபைல் எண் போன்ற விவரங்கள் வரும்.
அதைப் பூர்த்தி செய்து சமர்ப்பித்தால் உங்களுக்குத் தேவையான தகவல் அதில் கிடைக்கும்.
ஒருவேளை உங்களது திரையில் ’FTO is generated and Payment confirmation is pending’ என்ற தகவல் குறிப்பு இருந்தால் உங்களது பணத்தை டெபாசிட் செய்யும் பணி நடந்துவருகிறது; விரைவில் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் என்று புரிந்துகொள்ளலாம்.
இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி பெறும் விவசாயிகள் கட்டாயம் தங்களது ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைத்திருக்க வேண்டும். அப்படி இணைக்காவிட்டால் அவர்களுக்கு நிதி கிடைக்காது. ஆதார் இணைப்புக்கான கால அவகாசத்தை சென்ற ஏப்ரல் மாதத்தில் மத்திய அரசு நீட்டித்திருந்தது. அஸ்ஸாம், மேகாலயா, ஜம்மு & காஷ்மீர், லடாக் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளுக்கு மட்டும் 2021 மார்ச் மாதம் 31ஆம் தேதி வரையில் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மற்ற மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டிசம்பர் மாதம்தான் கடைசி அவகாசமாக அறிவிக்கப்பட்டது. அப்படி உங்களது ஆதாரை நீங்கள் இணைக்காமல் இருந்தால் உடனடியாக வங்கிக்குச் சென்று ஆதார் நகலை உங்களது கையொப்பத்துடன் வழங்கி இணைக்கலாம். ஆன்லைன் மூலமாகவும் நீங்கள் ஆதாரை இணைக்கலாம்.
Thanks to : samaiyam
Rathiri Rounds Never Stop