Breaking News
Home / செய்திகள் / இரவு 10 மணிக்கு மேல் பெட்ரோல் போட மறுத்த ஊழியரை தாக்கி 2 லட்சம் கொள்ளையடித்த மர்ம நபர்கள் !!- திருவள்ளூர் மாவட்டம்..

இரவு 10 மணிக்கு மேல் பெட்ரோல் போட மறுத்த ஊழியரை தாக்கி 2 லட்சம் கொள்ளையடித்த மர்ம நபர்கள் !!- திருவள்ளூர் மாவட்டம்..

திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் காக்களூர் பைபாஸ் சாலையில் திறக்கப்பட்டு சில நாட்களே ஆன தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் பங்கிற்கு 4 இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பெட்ரோல் பங்க் ஊழியரை பெட்ரோல் போடும்படி கண்டிப்புடன் வற்புறுத்தியுள்ளனர் இரவு பத்தரை மணி ஆகிவிட்டதால் பெட்ரோல் நிரப்ப முடியாது என மருத்த ஊழியர்களான சத்யா கண்ணன் மற்றும் மேலாளர் சின்னதுரை ஆகிய மூவரையும் தாக்கிய மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி உள்ளனர் .

 

மேலும் பங்கில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கி பெட்ரோல் பங்கில் இருந்த சுமார் 2 லட்சம் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

கொள்ளைச் சம்பவம் குறித்து பெட்ரோல் பங்க் உரிமையாளரான கருணாகரனுக்கு ஊழியர்கள் தகவல் கொடுத்ததன் பேரில் உரிமையாளர் திருவள்ளூர் தாலுகா காவல் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.

இந்த நிலையில் விரைந்து வந்த காவல் துறையினரை கண்ட மர்மநபர்கள் 2 இருசக்கர வாகனத்தை விட்டு விட்டு மாற்ற வாகனங்களில் தப்பியதாக தெரிகிறது

மேலும் நடந்த சம்பவம் குறித்து சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ள காட்சிகளை வைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

மேலும் மர்ம நபர்களால் தாக்கப்பட்டு காயமடைந்த சத்யா மற்றும் கண்ணன் இருவரும் திருவள்ளுவர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர்.

 

 

About Admin

Check Also

கோவை மாவட்டத்தை திமுக புறக்கணிக்கிறதா? மாஜி அமைச்சர் வேலுமணி

கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கூறியதாவது:கோவைக்கு வந்த ஸ்டாலின் சாலைகளை சீரமைக்க உத்தரவிடுவார் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster