Breaking News
Home / அரசியல் / வழிகாட்டுதல் குழுவில் யார்…? யார்…? இன்று வெளியாகிறது அறிவிப்பு.

வழிகாட்டுதல் குழுவில் யார்…? யார்…? இன்று வெளியாகிறது அறிவிப்பு.

அதிமுக நிர்வாகிகள் இடையே நடைபெற்ற முதற்கட்ட பேச்சுவார்த்தையில் முதலமைச்சர் வேட்பாளர் விவகாரத்தில் உடன்பாடு எட்டப்பட்டதாகவும், வழிகாட்டு குழுவை அமைக்க ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளரை அறிவிப்பதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்கும் முன், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி 11 பேர் கொண்ட வழிகாட்டு குழுவை அமைக்க வேண்டும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தினார்.

இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மூத்த அமைச்சர்களுடன் நேற்று நடத்திய ஆலோசனை கூட்டத்தில், உடன்பாடு எட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இக்கூட்டத்தில் 11 பேர் கொண்ட வழிகாட்டு குழுவை அமைப்பது குறித்தும், முதலமைச்சர் வேட்பாளரை அறிவிப்பது பற்றியும் சுமூக முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

வழிகாட்டு குழுவில் இடம்பெறும் உறுப்பினர்கள் யார்?, அந்த குழுவுக்கு என்னென்ன அதிகாரம் இருக்கும் என்பது குறித்து இன்று அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த குழுவில் மூத்த அமைச்சர்கள் மற்றும் ஓ.பி.எஸ் ஆதரவாளர்களாக இருக்கும் முக்கிய தலைவர்கள் இடம்பெறலாம் என்று கூறப்படுகிறது.

Thanks to: news 18

About Admin

Check Also

சென்னை ‘உஷ்ஷ்ஷ்!’ : இப்படி இருந்தால் கட்சி எப்படி வளரும்?

கட்சி எப்படி வளரும்? அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம், நேற்று முன்தினம் கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில், நகர்ப்புற …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster