பூகம்பம் ஏற்பட்டாலும் ஏற்படலாம் ஆனால் அதிமுகவில் எந்த பிளவும் ஏற்படாது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமை ஒட்டி சென்னை ஓட்டேரி பகுதியில் அமைச்சர் ஜெயக்குமார் அன்னதானம் வழங்கினார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், நோய்த்தொற்று பரவாமல் இருப்பதற்கு அரசு முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்தார். மேலும், அதிமுகவின் செயற்குழுவில் அரசு கொடுக்கப்பட்ட வழிமுறைகளை கடைபிடித்து தான் கூட்டத்தை நடத்தினோம், ஆனால் திமுக தலைவர் ஸ்டாலின் அதனை காரணம் காட்டி கிராம சபை கூட்டத்தை நடத்த வேண்டும் என்று கூறுகிறார்.
தமிழகத்தில் சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் இருக்கின்றன. தற்போது உள்ள அபாய காலங்களில் கூட்டத்தை தவிர்ப்பதன் மூலம் நோய்த் தொற்றைத் தடுக்க முடியும் என்பதற்காக அரசு எடுத்த முடிவு. ஆனால் எனக்கு சட்டம் கிடையாது என ஸ்டாலின் செயல்படுவது எப்படி ஜனநாயகத்தில் சரியாக இருக்கும் என்று கேள்வி எழுப்பினார்.
தமிழக மக்களுக்காக தான் இந்த சட்டங்கள் அமல்படுத்தப்படுகிறது. அந்த சட்டங்களை மதிப்பதில் தான் சிறந்த எதிர்க்கட்சிகளின் கடமையாக இருக்க முடியும். எனவே ஸ்டாலின் தடையை மீறி செயல்பட்டது குற்றம் குற்றமே என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், ஆறாம் தேதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டத்திற்கு வரவேண்டும் என்ற தகவல் தவறானது. அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கில் திட்டமிட்டு இதுபோன்ற வதந்திகளை பரப்பி வருகின்றனர்.
இதுபோன்ற வதந்திகளை பரப்பி விட்டு எதிரிகள் துரோகிகள் குளிர்காய வேண்டும் என்று நினைக்கின்றனர். அது நிச்சயம் நடைபெறாது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ள கருத்தை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அதிமுகவில் நடக்கும் நிகழ்வு இது. நாளையே இந்த பிரச்சனை சரியாகிவிடும். மக்களை பொறுத்தவரை மீண்டும் அதிமுக ஆட்சிதான் வேண்டும் என நினைக்கின்றனர். எனவே பூகம்பம் ஏற்பட்டாலும் ஏற்படலாம் ஆனால் அதிமுகவில் எந்த பிளவும் ஏற்படாது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
Thanks to : news 18
Rathiri Rounds Never Stop