Breaking News
Home / செய்திகள் / டாஸ்மாக் கடைகள் அடைப்பு !!

டாஸ்மாக் கடைகள் அடைப்பு !!

காந்தி ஜெயந்தியினை முன்னிட்டு சென்னை முழுவதும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் அடைக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மகாத்மா காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2-ம் தேதி நாடு முழுவதும் காந்தி ஜெயந்தியாக அனுசரிக்கப்படுகிறது. காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுபானக் கடைகளுக்கு விடுமுறை விடப்படுவது வழக்கம்.

இதுதொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பில், ‘நாளை காந்தி ஜெயந்தியினை முன்னிட்டு தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகள் 2003 விதி 12-ம் படி மற்றும் தமிழ்நாடு மதுபானம் விதிகள் 1981 விதி 25 ஆகியவற்றின் கீழ் சென்னை மாவட்டத்திலுள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், உரிமம் கொண்ட கிளப்புகளைச் சார்ந்த பார்கள், உரிமம் கொண்ட ஹோட்டல்களைச் சார்ந்த பார்கள் மற்றும் உரிமம் கொண்ட பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டிருக்க வேண்டும் எனவும், அன்றைய தினத்தில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது எனவும் அறிவிக்கப்படுகிறது.

தவறினால், மதுபான விதிமுறைகளின்படி சம்மந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் நாளை டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Thanks to : news 18

 

About Admin

Check Also

கோவை மாவட்டத்தை திமுக புறக்கணிக்கிறதா? மாஜி அமைச்சர் வேலுமணி

கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கூறியதாவது:கோவைக்கு வந்த ஸ்டாலின் சாலைகளை சீரமைக்க உத்தரவிடுவார் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster