Breaking News
Home / அரசியல் / விஜயகாந்த் சிங்க நடைபோட்டு மக்கள் முன்பு வருவார் ..

விஜயகாந்த் சிங்க நடைபோட்டு மக்கள் முன்பு வருவார் ..

விரைவில் விஜயகாந்த் சிங்க நடைபோட்டு கர்ஜனையுடன் மக்கள் முன்பு வருவார். ஓரிரு நாட்களில் அப்பாவும் அம்மாவும் இல்லம் திரும்புவார் என்று விஜய பிரபாகரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் இருவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்நிலையில், இருவரது உடல்நிலை குறித்தும் நேற்று முன்தினம் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் தற்போது தொண்டர்களுக்கு வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் விஜயகாந்த் ரொம்ப நல்லா இருக்கார். அம்மாவும் ரொம்ப நல்லா இருக்காங்க. கொரோனோ ஆரம்பகட்டத்திலேயே கண்டுபித்ததால் விரைவில் குணப்படுத்த முடிந்தது.எனக்கும் தம்பிக்கும் நெகட்டிவ் தான்.விரைவில் விஜயகாந்த் சிங்க நடைபோட்டு கர்ஜனையுடன் மக்கள் முன்பு வருவார். ஓரிரு நாட்களில் இருவரும் இல்லம் திரும்புவார்.

கொஞ்சம் நாட்கள் இருவரும் ஓய்வில் இருந்துவிட்டு மக்கள் பணியை தொடங்குவோம் என கூறினர், என்று தெரிவித்துள்ளார் விஜய பிரபாகரன். இதன் மூலம் விரைவில் விஜயகாந்த் மற்றும் பிரேமலதா விஜயகாந்த் இல்லம் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Thanks to : news 18

About Admin

Check Also

சென்னை ‘உஷ்ஷ்ஷ்!’ : இப்படி இருந்தால் கட்சி எப்படி வளரும்?

கட்சி எப்படி வளரும்? அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம், நேற்று முன்தினம் கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில், நகர்ப்புற …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster