Breaking News
Home / சினிமா / கமல் 232’ மோஷன் போஸ்டர் …

கமல் 232’ மோஷன் போஸ்டர் …

மாநகரம், கைதி வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் அவர்களுடன் மாஸ்டர் படத்தில் இணைந்தார் லோகேஷ் கனகராஜ். படமும் முழுவதும் முடிந்து ரிலீசுக்கு ரெடி. எனினும் கொரானாவின் தாக்கத்தால் திரையரங்கம் திறக்காததன் காரணத்தால் முடங்கியுள்ளது படம்.

அடுத்ததாக கமல் தயாரிப்பில் ரஜினியுடன் இணைவார் என கிசு கிசுக்கப்பட்டது. அந்த நேரத்தில் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் அடுத்த படத்தில் கமல்ஹாசனுடன் இணைவதை உறுதி செய்தார். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் செம வைரல்.

கமல்ஹாசன் 232’ படத்துக்கு அனிருத் இசையமைக்கவுள்ளார் மற்றும் ஆர்.கே.எஃப்.ஐ தயாரிக்கிறது.

சில வாரங்களில் படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ள இப்படம் 2021 கோடையில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரசிகர் ஒருவர் உருவாக்கிய மோஷன் போஸ்டர் லோகேஷின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதனை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். ஃபேன் மேட் மோஷன் போஸ்டராக இருப்பினும் அதனை இயக்குனரே பகிர்ந்தும் வைரலாகி விட்டது இந்த வீடியோ.

Thanks to : cinema pettai

 

About Admin

Check Also

சென்னை ‘உஷ்ஷ்ஷ்!’ : இப்படி இருந்தால் கட்சி எப்படி வளரும்?

கட்சி எப்படி வளரும்? அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம், நேற்று முன்தினம் கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில், நகர்ப்புற …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster