அதிமுகவில் முதல்வர் வேட்பாளர், வழிகாட்டுதல் குழு உள்ளிட்ட பிரச்னைகள் தொடர்பான சிக்கல் உருவாகியுள்ள நிலையில், கட்சியின் செயற்குழு நாளை கூடுகிறது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு வரவுள்ள சட்டப்பேரவை தேர்தல் குறித்து விவாதிக்க அதிமுகவின் செயற்குழு கூட்டம் நாளை கூடுகிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நாளை காலை ஒன்பதே முக்கால் மணிக்கு தொடங்கும் செயற்குழுவில், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் என 250 பேர் பங்கேற்க உள்ளனர். இதில் கட்சியின் வளர்ச்சிப்பணிகள், வேட்பாளர்கள் தேர்வு, கூட்டணி உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் முக்கிய தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ளதாகவும் தெரிகிறது.
இந்நிலையில் செயற்குழு கூட்டத்தை தொடர்ந்து, பொதுக்குழு நடக்கும் தேதி அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, நேற்று முன்தினம் இரவு துணை முதல்வர் ஓபிஎஸ், அவைத் தலைவர் இ.மதுசூதனனை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார். ஓய்வில் இருக்கும் அவரை ஓபிஎஸ் சந்தித்துள்ளது அதிமுகவில் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.
Thanks to : news 18
Rathiri Rounds Never Stop