பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான், சந்தோஷ் நாராயணன், தமன் உள்ளிட்ட திரைப்பிரலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.
கொரோனா தொற்று காரணமாக கடந்த மாதம் 5-ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில், பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அனுமதிக்கப்பட்டார். அதனைத்தொடர்ந்து 14-ம் தேதி அவரது உடல்நிலை மோசமடைந்ததால் தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டு வெண்டிலேட்டர், எக்மோ கருவிகளுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. செப்டம்பர் மாதத்தின் முதல்வாரத்திலிருந்தே எஸ்.பி.பி.யின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வந்ததாக அவரது மகன் எஸ்.பி.பி.சரண் மற்றும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டுவந்தநிலையில், நேற்றுமுதல் அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. நேற்று, மருத்துவமனை வெளியிட்ட அறிவிப்பில் அவரது உடல்நிலையில் மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என்று தெரிவித்திருந்தது. இந்தநிலையில், இன்று மதியம் 1.04 நிமிடங்களுக்கு உயிர் பிரிந்தது.
அவரது மறைவுக்கு நடிகர்கள் ஆர்யா, ஜெயம் ரவி, அருண் விஜய், பிரசன்னா, கௌதம் கார்த்திக் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். தமிழ் திரையுலகைக் கடந்து மலையாள திரையுலகைச் சேர்ந்த நிவின் பாலி, பார்வதி உள்ளிட்டவர்களும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். இசையமைப்பாளர்கள், இயக்குநர்கள், பாடகர்கள் என அனைவரும் எஸ்.பி.பியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.
Thanks to : news 18
Rathiri Rounds Never Stop