மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் காலமானார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் காலமானார்.
கொரோனா தொற்று காரணமாக கடந்த மாதம் 5-ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில், பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அனுமதிக்கப்பட்டார்.
அதனைத்தொடர்ந்து 14-ம் தேதி அவரது உடல்நிலை மோசமடைந்ததால் தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டு வெண்டிலேட்டர், எக்மோ கருவிகளுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. செப்டம்பர் மாதத்தின் முதல்வாரத்திலிருந்தே எஸ்.பி.பி.யின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வந்ததாக அவரது மகன் எஸ்.பி.பி.சரண் மற்றும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் எஸ்.பி.பி.யின் உடல்நிலை சிகிச்சைக்கு ஒத்துழைத்து வருவதாகவும், பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், மருத்துவர்கள் உதவியுடன் 15 முதல் 20 நிமிடங்கள் வரை அவர் எழுந்து அமர்ந்திருந்ததாகவும் கடந்த செப்டம்பர் 14-ஆம் தேதி எஸ்.பி.பி.சரண் தெரிவித்திருந்தார். அதைத்தொடர்ந்து அவர் விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப உள்ளதாகவும் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நேற்று எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனை எஸ்.பி.பி.உடல்நிலை குறித்து விடுத்திருக்கும் அறிக்கையில், கடந்த 24 மணிநேரமாக அவரது உடல்நிலை மோசமடைந்து வருவதாகவும், மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும், மருத்துவர்கள் அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்திருந்தனர்.
Thanks to : news 18
Rathiri Rounds Never Stop