Breaking News
Home / செய்திகள் / தி.மு.க., பொதுச் செயலர் துரைமுருகனின் ஆதரவாளர் வீட்டில் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை !! – வேலூர் மாவட்டம் ..

தி.மு.க., பொதுச் செயலர் துரைமுருகனின் ஆதரவாளர் வீட்டில் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை !! – வேலூர் மாவட்டம் ..

வேலுார்:தி.மு.க., பொதுச் செயலர் துரைமுருகனின் ஆதரவாளர் வீட்டில், நேற்று சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

கடந்தாண்டு, வேலுார் தொகுதியில் நடந்த லோக்சபா தேர்தலில், தி.மு.க., சார்பில், துரைமுருகன் மகன் கதிர் ஆனந்தும், அ.தி.மு.க., சார்பில், ஏ.சி.சண்முகமும் போட்டியிட்டனர்.

அப்போது, வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய, காட்பாடி அடுத்த பள்ளிக்குப்பத்தில், தி.மு.க., கிளை செயலர் பூஞ்சோலை சீனிவாசன், 56, குடோனில், பணம் பதுக்கி உள்ளதாக, அதிகாரிகளுக்கு தகவல் சென்றது.அதிகாரிகள் நடத்திய சோதனையில், 1.50 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது.

விசாரணையில்,வாக்காளர்களுக்கு கொடுக்க,’பூத் சிலிப்’களுடன்,சாக்கு மூட்டை, துணிப்பை, அட்டை பெட்டியில் மறைத்து வைத்திருந்தது தெரிந்தது.இதையடுத்து, பூஞ்சோலை சீனிவாசன் மீது தேர்தல் அதிகாரிகள், வருமான வரித்துறையினர் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்தனர்.

மத்திய புலனாய்வுப் பிரிவு போலீசாரும் விசாரித்தனர். இதனால், தேர்தல் ரத்து செய்யப்பட்டு, பின் நடந்த தேர்தலில், தி.மு.க., வெற்றி பெற்றது.இந்நிலையில், நேற்று காலை, சென்னை மற்றும் டில்லியில் இருந்து வந்த, சி.பி.ஐ., அதிகாரிகள் நான்கு பேர், பூஞ்சோலை சீனிவாசன் வீட்டுக்கு சென்று, அவரிடம் மூன்று மணி நேரம் விசாரணை செய்தனர்.

அவரது சகோதரி விஜயா, 60, அவரது கணவர் தாமோதரன், 65, மற்றும் உறவினர்கள் என, 10 பேரிடம் விசாரணை செய்தனர். இதில், அவர்கள் முக்கிய தகவல்களை கூறி, சில ஆவணங் களை கொடுத்ததாக தெரிகிறது.இது குறித்து, பூஞ்சோலை சீனிவாசனிடம் கேட்டதற்கு, தேர்தலின் போது, பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து, சென்னையில் நடக்கும் விசாரணைக்கு ஆஜராக, சம்மன் வழங்கப்பட்டதாக கூறினார்.

 

Thanks to : dinamalar

About Admin

Check Also

கோவை மாவட்டத்தை திமுக புறக்கணிக்கிறதா? மாஜி அமைச்சர் வேலுமணி

கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கூறியதாவது:கோவைக்கு வந்த ஸ்டாலின் சாலைகளை சீரமைக்க உத்தரவிடுவார் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster