Breaking News
Home / செய்திகள் / இன்று ஒரே நாளில் 5,692 பேருக்கு கொரோனா பாதிப்பு…

இன்று ஒரே நாளில் 5,692 பேருக்கு கொரோனா பாதிப்பு…

இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 5,63,691 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,692 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 5,470 பேர் குணமடைந்து வீடு திரும்பிய உள்ள நிலையில் 66 பேர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து 6 ஆயிரத்தை நெருங்கியே வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகரித்தப் போதிலும் இறப்பு எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸால் தமிழகத்தில் 5,692பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 5,63,691 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் கொரோனாவிலிருந்து 5,470 பேர் கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தமாக கொரோனாவிலிருந்து 5,08,210 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

கொரேனா உயிரிழப்பு இன்று 66 ஆக பதிவாகி உள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் இதுவரை 9,076 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 1089 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

Thanks to : news 18

About Admin

Check Also

கோவை மாவட்டத்தை திமுக புறக்கணிக்கிறதா? மாஜி அமைச்சர் வேலுமணி

கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கூறியதாவது:கோவைக்கு வந்த ஸ்டாலின் சாலைகளை சீரமைக்க உத்தரவிடுவார் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster