Breaking News
Home / தமிழகம் / 28 வயது பெண்ணும் 70 வயது தாத்தாவும்..அய்யோ என்ன செய்திருகாங்க பாருங்களேன்!

28 வயது பெண்ணும் 70 வயது தாத்தாவும்..அய்யோ என்ன செய்திருகாங்க பாருங்களேன்!

எனக்கு 70 – என் பொண்டாட்டிக்கு 28..! என்கிற கதையாக ஒரு திருமண சம்பவம் நடந்துள்ளது.
திருவண்ணாமலை தி.மு.கவில் தற்போது ஹீரோவாக பார்க்கப்படுகிறார் 70 வயது தாத்தா. ஏன்னா அவர் 28 வயதுள்ள அழகியை கல்யாணம் செய்துக் கொண்டிருக்கிறார். அதுவும் மூன்று வருடங்களாக காதலித்து, அதன் பின்னர் நடந்த கல்யாணமாம்.

சரி வாங்க அந்த தாத்தா மாப்பிள்ளை யார் என்று பார்ப்போம்.

திருவண்ணாமலையில் சாவல் பூண்டியைச் சேர்ந்தவர் மா.சுந்தரேசன். 70 வயதான சுந்தரேசன் பல ஆண்டுகளாக தி.மு.க.வில் உள்ளார். 6 முறை சாவல்பூண்டி பஞ்சாயத்து தலைவராக இருந்திருக்கிறார். முன்னாள் அமைச்சரும், தற்போதைய தி.மு.க. எம் .எல் .ஏ. வான எ.வ.வேலுவின் தீவிர விசுவாசியான இவர், தற்போது திருவண்ணாமலை தெற்கு மாவட்ட துணை செயலாளராக உள்ளார்.

இவர் ‘சாவல்பூண்டி சங்கப்பலகை’ என்ற அமைப்பை உருவாக்கி, அதன் வாயிலாக பல பேச்சாளர்களை உருவாக்கி வருகிறார். அப்படியிருக்க, திருவண்ணாமலையைச் சேர்ந்த 25 வயது இளம் பெண்ணான அபிதா தி.மு.க.புள்ளி சுந்தரேசனிடம் பட்டிமன்ற பேச்சாளராக அறிமுகமானார்.

அபிதாவுக்கு நன்கு பேச கற்றுக்கொடுத்த சுந்தரேசன் அப்படியே லவ்ஸ் மேட்டரையும் கற்பித்திருக்கிறார்.

இந்த தாத்தா ப்ளஸ் இளம் பெண் காதல் மேட்டர் கடந்த 3 ஆண்டுகளாக இருந்து வருகிறது.

தாத்தா சுந்தரேசனுக்கு ஏற்கனவே மனைவி, மகன், மகள் பேரன் பேத்திகள் எல்லாம் உள்ளனர்.

அவர்களுக்கு இந்த லவ்ஸ் மேட்டர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தெரியவந்தது. பின்னர் அவரிடம் குடும்பத்தினர் நியாயம் கேட்டிருக்கிறார்கள். உன் வயசுக்கு இது தேவையா என்று கண்டிப்பு காட்டி ஏமாந்து போனார்கள்.

இருப்பினும் வெளிநாட்டிலுள்ள அவரது மகனுக்கு இந்த விவகாரம் தெரியவர அவர் லீவு போட்டுவிட்டு வந்து அழகியின் வீட்டை அடித்து துவம்சம் செய்தார்.அந்த செய்தி சின்னதாக ஒரு ரவுண்டு வந்தது.

இந்நிலையில் அவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பேத்தி வயதில் உள்ள அழகி அபிதாவுக்கு தாத்தா சுந்தரேசன் தாலிகட்டி கரம் பிடித்திருக்கிறார்.

இச்செய்தி சோஷியல் மீடியாக்களில் வைரலாகிவரும் நிலையில், இந்த ஜோடி ஹனி மூனுக்கு எங்கே போகிறீர்கள் என்று பலரும் போன் போட்டு கலாய்ப்பதாக தகவல்.

இப்படியெல்லாம் செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்க சம்மந்தப்பட்டவர்கள் இது குறித்து எந்த கருத்தும் கூற முன்வரவில்லை.

About Admin

Check Also

கோவை மாவட்டத்தை திமுக புறக்கணிக்கிறதா? மாஜி அமைச்சர் வேலுமணி

கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கூறியதாவது:கோவைக்கு வந்த ஸ்டாலின் சாலைகளை சீரமைக்க உத்தரவிடுவார் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster