Breaking News
Home / செய்திகள் / மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை..

மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை..

கூட்டத்தில் மத்திய மற்றும் மாநில சுகாதாரத்துறை அமைச்சர்கள் மற்றும் செயலாளர்களும் பங்கேற்கவுள்ளனர்.

கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து தமிழகம் உள்ளிட்ட ஏழு மாநில முதலமைச்சர்களுடன் இன்று பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவுள்ளார்.

தமிழகம், மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, உத்தர பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட ஏழு மாநிலங்களில், கொரோனா தொற்று கட்டுக்கடங்காமல் தொடர்ந்து பரவி வருகிறது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 63 விழுக்காடு பேர் இம்மாநிலங்களை சேர்ந்தவர்கள். இதனால் ஏழு மாநிலங்களில் நோய் தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பாக அம்மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்துகிறார்.

இந்தக் கூட்டத்தில் மத்திய மற்றும் மாநில சுகாதாரத்துறை அமைச்சர்கள் மற்றும் செயலாளர்களும் பங்கேற்கவுள்ளனர்.

 

Thanks to : news 18

About Admin

Check Also

கோவை மாவட்டத்தை திமுக புறக்கணிக்கிறதா? மாஜி அமைச்சர் வேலுமணி

கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கூறியதாவது:கோவைக்கு வந்த ஸ்டாலின் சாலைகளை சீரமைக்க உத்தரவிடுவார் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster