வேலுார்:மாணவியிடம் அத்துமீற முயன்ற, அரசு கல்லுாரி பேராசிரியரை, போலீசார் கைது செய்தனர்.
வேலுார் மாவட்டம், குடியாத்தத்தில், அரசினர் திருமகள் ஆலை கல்லுாரி உள்ளது. இங்கு, ஆங்கில துறை பேராசிரியராக பணியாற்றி வருபவர் ரமேஷ், 38.திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்துார் கூட்டாந்துாரைச் சேர்ந்த இவர், கல்லுாரி அருகே, காந்தி நகரில் வீடு எடுத்து தங்கி உள்ளார்.
அதே கல்லுாரியில் படிக்கும், 18 வயது மாணவியை, நேற்று முன்தினம் மாலை, பாடம் குறித்து பேச அழைத்துள்ளார்.இதை நம்பி வந்த மாணவியிடம் ரமேஷ் அத்துமீற முயன்றார். அதிர்ச்சி அடைந்த மாணவி, அங்கிருந்து தப்பிச் சென்றார். மாணவியின் பெற்றோர், குடியாத்தம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து, பேராசிரியர் ரமேஷை கைது செய்தனர்.
Thanks to : dinamalar
Rathiri Rounds Never Stop