Breaking News
Home / செய்திகள் / ஒட்டன்சத்திரம் அருகே வீட்டை சூறையாடிய ஒற்றை யானை வாழ்வாதாரம் இழந்து குடும்பத்தினர் தவிப்பு !!!

ஒட்டன்சத்திரம் அருகே வீட்டை சூறையாடிய ஒற்றை யானை வாழ்வாதாரம் இழந்து குடும்பத்தினர் தவிப்பு !!!

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள வனப்பகுதியில் கடந்த சில தினங்களாக 5 யானைகள் வனப் பகுதியில் அமைந்துள்ள பரப்பலாறு அணை நீர் தேக்கத்தில் சுற்றி வலம் வந்து கொண்டு இருந்தது, இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பரப்பலாறு அணை பகுதியில் பெண் யானைக்கு குட்டி யானை பிறந்து சம்பவ இடத்திலேயே இறந்து விட்டது, இதனால் ஆத்திரமடைந்த பெண் யானை ஆக்ரோஷமாக வனபகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் மற்றும் சாலைகளில் உலா வந்துக்கொண்டிருந்தது, இதனால் பொதுமக்களை வனத்துறையினர் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க அறிவுரை படுத்தினார்கள்

பரப்பலாறு நீர்த்தேக்கத்தை ஒட்டியுள்ள பெத்தேல்புரம்,சிறுவாட்டுக்காடு, குடியிருப்பு பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர், இந்த நிலையில் நேற்று இரவு குடியிருப்பு பகுதிகளில் வலம் வந்த ஒற்றை யானை திருவேற்காடு பகுதியில் குடியிருந்து வரும் மங்கலம் (லேட்) என்பவரின் மகன் கணேசன் (40) மற்றும் அவரது மனைவி ராணி. (35) ஆகிய இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர், இந்நிலையில் நேற்று மகளைக் காண வெளியூர் சென்றிருந்த நிலையில் நேற்று இரவு சரியாக இரண்டு மணி அளவில் சிறு காடு பகுதியில் வலம்வந்த ஒற்றையானை அவரது வீட்டின் சுவர்களை தாக்கியதில் சுவர் இடிந்து உள்ளே விழுந்தது மேலும் வீட்டின் மேல் உள்ள ஓடுகள் கதவு மற்றும் வீட்டின் உள்ளே உள்ள டிவி பிரிட்ஜ் பீரோ கட்டில் கேஸ் உள்ளிட்ட சுமார் 2 லட்சம் மதிப்புள்ள வீட்டு உபயோக பொருட்களை அடித்து சூறையாடியது,

 

 

பின்னர் நேற்று காலை வெளியூரிலிருந்து வந்து பார்த்த கணேசன் தன்னுடைய வீடு யானைகளால் தாக்கப்பட்டு மிகுந்த சேதமுற்ற அதை கண்டு அதிர்ச்சி அடைந்தார் இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் அங்கு வந்த வனத்துறை அதிகாரிகள் யானையை துரத்த பட்டாசுகளை வெடித்து வேறு பகுதிக்கு திசை திருப்பி உள்ளனர். தற்போது கொரோனா காலத்தில் வேலை இழந்து வாழ்வாதாரத்தை இழந்து உள்ள நிலையில் இதுபோன்ற அசம்பாவிதங்கள் இதயத்தில் ஈட்டி பாய்ந்ததாக இருக்கிறது

எனவே ஒட்டன்சத்திரம் வனத்துறை பகுதியில் உள்ள பெதெல்புரம் சிறுவாட்டு காடு,செட்டிக்காடு பள்ளிக்கூடம் ஆகிய பகுதிகளில் ஒற்றை யானை அட்டகாசம் அதிக அளவில் உள்ளது ஏற்கனவே அப்பகுதியில் இருந்த பள்ளிக்கூடத்தில் உள்ள மரங்களை சேதப்படுத்தியது பின்னர் ரேஷன் கடைகளில் உள்ள கதவுகளை தாக்கி சேதப்படுத்தியது உள்ளிட்ட எண்ணற்ற அசம்பாவிதங்கள் ஒற்றை யானையால் அப்பகுதியில் அதிகம் நடந்து வருகிறது இது குறித்து பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த பயனும் இல்லை.

மாவட்ட நிர்வாகம் தயவுகூர்ந்து வனப்பகுதி வாழ் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அவர்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தித் தருமாறும் அப்பகுதியில் நீண்டநாளாக வலம் வந்து கொண்டிருக்கும் ஒற்றை யானையை வேறு பகுதிக்கு மாற்றி திசை திருப்ப வேண்டும் என அப்பகுதி மக்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

About Admin

Check Also

கோவை மாவட்டத்தை திமுக புறக்கணிக்கிறதா? மாஜி அமைச்சர் வேலுமணி

கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கூறியதாவது:கோவைக்கு வந்த ஸ்டாலின் சாலைகளை சீரமைக்க உத்தரவிடுவார் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster