தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இதுவரை 11.98 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை கடந்த 17ம் தேதி முதல் நடபெற்று வருகிறது. இதில், அரசுப் பள்ளியில் 8.10 லட்சம் மாணவர்களும், உதவி பெறும் பள்ளிகளில் 3.28 லட்சம் பேரும் சேர்ந்துள்ளனர்.
அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் மட்டும் 2.4 லட்சம் மாணவர்கள் இணைந்துள்ளனர். இது 4 லட்சமாக உயரக்கூடும் என்று பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்திருக்கிறார். நடப்பாண்டில் தனியார் பள்ளியில் இருந்து அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு அதிகளவில் மாணவர்கள் இடம் மாறியிருப்பதாகக் கூறப்படுகிறது.
இதற்கு கொரோனா ஊரடங்கு காரணமாக ஏற்பட்ட வருவாய் இழப்பும் ஒரு காரணமாக கூறப்பட்ட நிலையில், அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் அரசின் முடிவு காரணமாகவும் அரசுப் பள்ளிகளை நாடி மாணவர்கள் வருவதாக ஆசிரியர் சங்கத் தலைவர் இளமாறன் கூறியுள்ளார்.
Thanks to : news 18
Rathiri Rounds Never Stop