Breaking News
Home / சினிமா / நடிகர் ஜெயபிரகாஷ் காலமானார் ..

நடிகர் ஜெயபிரகாஷ் காலமானார் ..

Jaya prakash Reddy Passes away | தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லனாகவும், காமெடி நடிகராக நடித்த ஜெயபிரகாஷ் இன்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லனாகவும், காமெடி நடிகராக நடித்த ஜெயபிரகாஷ் இன்று குண்டூரில் உள்ள தனது வீட்டில் குளியல் அறையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

ஆந்திர மாநிலம் குண்டூரில் உள்ள அவரது வீட்டில் காலை படுக்கையில் இருந்து எழுந்து குளியல் அறைக்கு சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் ஜெயபிரகாஷ் குளியலறையிலிருந்து வெளியே வராத நிலையில் குடும்ப உறுப்பினர்கள் குளியலறை கதவை உடைத்து சென்று பார்த்தபோது, அவர் குளியல் அறையிலேயே மாரடைப்பால் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

ஜெய பிரகாஷ் ரெட்டி காவல் துறையில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்த நிலையில் நாடகம் மற்றும் நடிப்பு ஆகியவற்றின் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக நாடகங்களில் முதலில் நடிக்க ஆரம்பித்து பின்னர் சினிமா துறையில் கால்பதித்து தனக்கென ஒரு பெயரை உருவாக்கி வில்லனாகவும் காமெடி நடிகராகவும் ரசிகர்களின் மனதை கவர்ந்து வந்தார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 5 மாதங்களுக்கு மேலாக சினிமா படப்பிடிப்புகள் நடைபெறாமல் இருந்த நிலையில் குண்டூரில் உள்ள தனது வீட்டில்  திடீரென உயிரிழந்திருப்பது தெலுங்கு திரைப்படத் துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Thanks to : news 18

About Admin

Check Also

சென்னை ‘உஷ்ஷ்ஷ்!’ : இப்படி இருந்தால் கட்சி எப்படி வளரும்?

கட்சி எப்படி வளரும்? அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம், நேற்று முன்தினம் கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில், நகர்ப்புற …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster