தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,783 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 88 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று ஒரு நாளில் 84,034 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரையில், 51,26,231 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் 5,783 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த பாதிப்பு 4,63,480 ஆக அதிகரித்துள்ளது.
இன்று மட்டும் கொரோனா பாதிப்பு குணமடைந்து 5,820 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில், 4,04,186 பேர் கொரோனா பாதிப்பு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தமிழகத்தில் இன்று மட்டும் 88 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 7,836 ஆக அதிகரித்துள்ளது.
இன்று மட்டும் சென்னையில் 955 பேரும், கோயம்புத்தூரில் 538 பேரும், கடலூரில் 388 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Thanks to : news 18
Rathiri Rounds Never Stop