Breaking News
Home / செய்திகள் / குடியிருப்பு பகுதியில் யானைகள் அட்டகாசம் பொதுமக்கள் பீதி !!!

குடியிருப்பு பகுதியில் யானைகள் அட்டகாசம் பொதுமக்கள் பீதி !!!

ஒட்டன்சத்திரம்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள வனப்பகுதியில் கடந்த சில தினங்களாக 5 யானைகள் வனப் பகுதியில் அமைந்துள்ள பரப்பலாறு அணை நீர் தேக்கத்தில் சுற்றி வலம் வந்து கொண்டு இருந்தது, இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பரப்பலாறு அணை பகுதியில் பெண் யானைக்கு குட்டி யானை பிறந்து சம்பவ இடத்திலேயே இறந்து விட்டது, இதனால் ஆத்திரமடைந்த பெண் யானை ஆக்ரோஷமாக வனபகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் மற்றும் சாலைகளில் உலா வந்துக்கொண்டிருந்தது, இதனால் பொதுமக்களை வனத்துறையினர் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க அறிவுரை படுத்தினார்கள்

பரப்பலாறு நீர்த்தேக்கத்தை ஒட்டியுள்ள பெதெல்புரம் குடியிருப்பு பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர், இந்த நிலையில் நேற்று இரவு குடியிருப்பு பகுதிகளில் வலம் வந்த யானைகள் அப்பகுதியில் பள்ளிக்கூடத்தில் உள்ள வாழை மரம், தென்னை மரம், உள்ளிட்ட மரங்களை சேதப்படுத்தி நீண்ட நேரமாக அப்பகுதியில் வலம் வந்து கொண்டிருந்தது இதனால் பயந்து போன அப்பகுதி மக்கள் ஒட்டன்சத்திரம் வனத்துறை நிர்வாகத்திற்கு தகவல் அளித்ததன் பேரில் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் பட்டாசுகளை வெடித்து யானைகளை வனப்பகுதிக்குள் துரத்தி விட்டனர்.

 

About Admin

Check Also

கோவை மாவட்டத்தை திமுக புறக்கணிக்கிறதா? மாஜி அமைச்சர் வேலுமணி

கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கூறியதாவது:கோவைக்கு வந்த ஸ்டாலின் சாலைகளை சீரமைக்க உத்தரவிடுவார் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster