வேலூர்: ”தமிழகத்தில், புதிய கல்வி கொள்கை குறித்து, பா.ஜ., மகளிர் அணி சார்பில் திண்ணை பிரசாரம் நடத்தப்படும்,” என, பா.ஜ., மகளிரணி மாநில தலைவி மீனாட்சி கூறினார். வேலூரில், பா.ஜ., மகளிர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட அவர், முன்னதாக நிருபர்களிடம் கூறியதாவது: பிரதமர் மோடியின், 70வது பிறந்த நாளையொட்டி, தமிழகத்தில் மகளிரணி சார்பில், 70 ஆயிரம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், 90 ஆயிரம் இடங்களில், தாமரை சின்னத்தை சுவர்களில் வரைய உள்ளோம். தமிழகத்தில், புதிய கல்வி கொள்கை குறித்து, மக்களுக்கு விளக்கும் வகையில், மகளிரணி சார்பில் திண்ணை பிரசாரம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Thanks to : dinamalar
Rathiri Rounds Never Stop