Breaking News
Home / செய்திகள் / ஈஸியான இ-பாஸ்… புதிய மாற்றம்..!

ஈஸியான இ-பாஸ்… புதிய மாற்றம்..!

E Pass | இ-பாஸ் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் வழங்கும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

கொரோனா ஊரடங்கால் தமிழகத்தில் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு செல்ல இ பாஸ் நடைமுறையில் உள்ளது. திருமணம், இறுதிச் சடங்கு, மருத்துவத் தேவை போன்றவை தவிர மற்ற பயணங்களுக்காக விண்ணப்பித்தால் இ பாஸ் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வந்தது.

இதில் முறைகேடு நடைபெறுவதாக தொடர்ந்து புகார் எழுந்த நிலையில் இ – பாஸ் நடைமுறை ரத்து செய்யவேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று முதல் விண்ணப்பித்த அனைவருக்கும் இ பாஸ் கிடைக்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இதையடுத்து இ-பாஸ் விண்ணப்பிக்கும் முறை இன்று முதல் எளிதாக்கப்பட்டுள்ளது. அதன்படி நாம் எங்கு செல்கிறோம் என்பதற்கு ஆதராமாக ஆவணம் (proof sumbit) சமர்பிக்கும் முறை நீக்கப்பட்டுள்ளது. திருமணம், மருத்துவ அவசரம் உள்ளிட்ட பிற காரணங்களுக்கு இ-பாஸ் விண்ணப்பித்தால் ஆதராமாக நாம் ஏதேனும் ஆவணம் சமர்பிக்க வேண்டும். தற்போது இ-பாஸ் விண்ணப்பிக்கும் முறையிலிருந்து இது நீக்கப்பட்டுள்ளது,

 

என்ற தளத்தில் இ-பாஸ் பெற விண்ணப்பிக்கலாம்

மேலும் விண்ணப்பித்த உடன் இ-பாஸ் எங்கும் செல்கிறோமோ அந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டு வந்தது. இ-பாஸ் விண்ணப்பித்த 4 மணி நேரத்தில் இதன் விவரம் தெரிய வரும். தற்போது ஆதார் அட்டை எண் மற்றும் செல்போன் நம்பரை சமர்பித்த அடுத்த நொடியே யாருடைய ஒப்புதலும் இல்லாமல் இ-பாஸ் கிடைக்கும்படி செய்யப்பட்டுள்ளது.இதனால் இ-பாஸ் விண்ணப்பிவர்கள் அனைவருக்கும்ம் விரைவாகவும், எளிதாகவும் கிடைக்கும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

 

Thanks to : news 18

About Admin

Check Also

கோவை மாவட்டத்தை திமுக புறக்கணிக்கிறதா? மாஜி அமைச்சர் வேலுமணி

கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கூறியதாவது:கோவைக்கு வந்த ஸ்டாலின் சாலைகளை சீரமைக்க உத்தரவிடுவார் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster