Breaking News
Home / அரசியல் / எஸ்.வீ.சேகரின் ஆசையை அரசு நிறைவேற்றும் – அமைச்சர் ஜெயக்குமார்..

எஸ்.வீ.சேகரின் ஆசையை அரசு நிறைவேற்றும் – அமைச்சர் ஜெயக்குமார்..

சிறைக்குச் செல்ல வேண்டும் என்ற எஸ்.வீ.சேகரின் ஆசையை அரசு நிறைவேற்றும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்,

 

பாஜக நிர்வாகி எஸ்.வி சேகர் சமீபத்தில் அதிமுக அரசை விமர்சித்து வீடியோ வெளியிட்டிருந்தார். இதற்கு அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்திருந்தனர்.

வழக்கு போட்டால் ஓடி ஒளிந்துகொள்வார் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்தார். இந்த நிலையில், மீண்டும் அரசு மற்றும் முதல்வர் குறித்து எஸ்.வி சேகர் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

 

காவி நிறம் களங்கம் என்றால் தேசியக் கொடியில் ஏன் காவி நிறம் என்கிற வகையில் பேசியிருந்தார். இது தொடர்பாக அவர் மீது சென்னை போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இது குறித்து ஜெயக்குமார் தெரிவிக்கையில், ”தேசிய கொடியை அவமதித்ததும், முதல்வர் பற்றி அவதூறாகப் பேசியதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. எஸ்.வி.சேகர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும். அவர் சிறைக்குச் செல்ல வேண்டும் என்பது ரொம்ப நாள் ஆசை, அரசு அதை நிறைவேற்றும்” என்றும் கூறினார்.

 

Thanks to : news 18

About Admin

Check Also

சென்னை ‘உஷ்ஷ்ஷ்!’ : இப்படி இருந்தால் கட்சி எப்படி வளரும்?

கட்சி எப்படி வளரும்? அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம், நேற்று முன்தினம் கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில், நகர்ப்புற …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster